பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நினைவுக் குமிழிகள்-2

ஊதியத்தையும் 70 அல்லது 15 சதவிகிதத்திற்குக் குறைத்தே தரப்பெற்றது. வேலையில்லாத் திண்டாண்டத்தையும் ஆசிரியர்கள் வறுமையையுங் காரணமாக வைத்துக்கொண்டு * நிர்வாகம் இயங்கியது.

ஒன்றிரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் எல். மாணிக்கம் ரூ. 1000/- செலுத்தித் தம்மைப் பணியிலி ருந்து கழற்றிக் கொண்டுவிட்டார். இவருக்கு வைரிசெட்டிப் பாளையப் பள்ளி நிர்வாகம் ரூ. 1000/- வழங்கி ஊதியத் திலும் பத்து ரூபாய் அதிகமாகத் தந்து இவரைத் தம் பள்ளி யில் நியமித்துக் கொண்டது. இங்ங்ணமே எஸ். தியாகராச லுக்கு ரூ. 1000/- தந்து, உயர்ந்த ஊதியமும் தந்து திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி நிர்வாகம் அவரைத் தம்கல்லூரிக்கு இழுத்துக் கொண்டுவிட்டது. இதில் எனக்கும் நிர்வாகத் திற்கும் பெருத்த ஏமாற்றம்.

இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். முதலாளி வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்று இக்காலத்தில் உலகமெங்கும் பேசப்பெறுகின்றது. இப் படிப்பட்ட பிரிவுகள் நிரந்தரமானவை அல்ல. ஒவ்வொரு வருடைய உள்ளத்திலும் இந்தப் பிரிவு அமைந்து கிடக் கின்றது. ஊதியத்திற்காகப் போராடுவோர் தம்மைத் தொழிலாளர்கள் எனக் கருதுகின்றனர். இவர்களே சலவைக் கூலியும் முடி திருத்தும் கூலியும் உயரும்போது சங்கடப் படுகின்றனர். மனம் ஒப்பித்தர மறுக்கின்றனர். இந்தத் தொழிலாளர்களில் சிலர் கடும் உழைப்பில் பொருளாதார நிலையில் உயர்ந்து தனியாகத் தொழிலைத் தொடங்கும் போது, பலருக்கு வேலை வாய்ப்புத் தரும் நிலைக்கு வரும் போது முதலாளி நிலையை அடைகின்றனர்; இப்போது தம் கீழ் பணியாற்றும் தொழிலாளருக்குச் சரியான ஊதியம்