பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 நினைவுக் குமிழிகள்-2

தாராளமாகவே பரிசுத் திட்டங்கள் இருந்தன. பள்ளி நூல்கள் விற்பனையில் ரூ. 30 - ரூ. 400/- அளவு கிடைக்கும் இலாபத்தில் பாதி விளையாட்டுப் போட்டிகளில் தரப் பெறும் பரிசுப் பொருள்களை வாங்குவதற்குச் செலவிடப் பெற்றது. விளையாட்டுகளுக்காகத் தண்டப்பெறும் நிதியி லிருந்து பரிசுப் பொருள்கள் வாங்கப் பெறுவதில்லை" போட்டிகள் நடத்த ஒரு குறிப்பிட்ட அளவு தொகை செலவிடப் பெற்றது. சில செல்வர்களிடம் திதி பெற்று அவர்கள் பெயரில் சுழல் கோப்பைகள் (Rolling Cபps) சுழல் கேடயங்கள் :Rolling Shields) அமைக்கப் பெற்றன. இன்று நகர்ப்புறக் கல்லூரிகளில் நடைபெறும் விழாக்கள்போல் சுமார் ஐம்பது ஆண்டுகட்குமேல் சிற்றுார்களில் நடத்தியதை இன்று (48 ஆண்டுகட்குப் பிறகு) நினைவு கூர்ந்து பெருமிதம் கொள்ளுகின்றேன். என்னுடைய உழைப்பு முழுவதும் பள்ளி முன்னேற்றத்திலேயே கழிந்ததை நினைவு கூர்ந்து களிப் படைகின்றேன். என்கடன் பணி செய்து கிடப்பதே என்ற அப்பர் பெருமானின் வாக்கிற்கு ஆட்படுத்தப்பெறுவதற்குக் காரணமாக இருந்த திருவருளை நினைந்து போற்று கின்றேன். -

பள்ளி ஆண்டுவிழா : முதல் இரண்டாண்டுகள் "ஆண்டு விழா என்ற பெயரில் ஒன்றும் நடைபெறவில்லை. வகுப்புகள் நடைபெறுவதற்கே இடவசதிகள் இல்லை; வகுப்புகளில் மாணவர்கள் அமர்வதற்கு இருக்கை வசதிகளும் இல்லை. இவற்றைச் சரிப்படுத்தவே என் காலமும் உழைப்பும் செல வழிந்தது. ஆகவே, விழாவைப்பற்றிச் சிந்திக்கவே நேரம் இல்லாது போயிற்று, சிற்றுாரில் ‘கஞ்சப் பிரபுக்களால்’ தொடங்கப்பெற்ற புதிய பள்ளியில் பல பிரச்சினைகள். இவற்றைச் சமாளிக்கும் பொறுப்பு என் தலைமீது இருந்தது. இவ்வளவு சுமையும் தாங்க வேண்டியிருந்ததால்தான் என்னைத் தலைமை ஆசிரியர் என்று அழைத்தனரோ என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது.