பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

家x

பணத்தின்மூலம் தமக்கு வாழ்க்கைப்படி அளப்பதால் தாம் சமூகத் தொண்டர்கள் என்று கருதுபவர்கள். தொண்டு செய்வதைவிட பாவனைதான் முக்கியம்.

நான் அறிந்து கொண்டவரை திரு. பன்னீர்செல்வம் சுமார் 30 ஆண்டுகளாக அரசுத் 1றயில் உண்மை ஊழிய ராகத் திகழ்கின்றார். நைவேண்டிவருபவர்கட்கு இன் முகத்துடன் பேசுவது, இயன்றவரை, குறைகளைத் தீர்ப்பது, அல்லது தம் செயலுக்கு அப்பாற்பட்டிருந்தால், அதுவும் உண்மையில் குறை கண்டு விட்டால், மேவிடத்திற்குப் பரிந்துரைப்பது போன்ற செயல்களால் பொதுமக்களின் மதிப்பிற்கும் மரியாதக்ம் உள்ளவராகத் திகழ்கின்றார். அறிவியல் பட்டதாரிய :பதால் எதையும் அறிவியல் நோக்கில் காண்பவர: ;ழ்கின்றார். வாழ்க்கையின் பிரச்சினைகளைப் புதிர்க்கதி {X-ray} பார்வையுடன் நோக்கித் தெளிந்து ஒல்லும் வகை:ெல்லாம் உதவுபவர். அமைதியான போக்குடைய இவர் நல்ல இலக்கியச் சுவைஞர்; இறையுணர்வு மிக்கவர். பண்புடையார் பட்டுண்டு உலகு" என்பதைத் தெளிந்தவர். இத்தகைய ஒரு பேரன்பர்-இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியது இன்நூலின் பெறற்கரிய பேறாகும்; என் பேறுமாகும். அணிந்துரை வழங்கிய அன்ப

ருக்கு என் இதயம் கனிந்த நன்றி என்றும் உரியது. -

இந்த நூலை எழுதி வெளிவருவதற்குத் தோன்றாத் துணையாக நின்று உதவியவன் வேங்கடவெற்பில் குன்றின் மேல் விளக்குபோல் எழுந்தருளியிருக்கும் வேங்கட கிருஷ்ணன் என்னும் சீநிவாசன். இவனே எனக்கு உடல் நலமும் மனவளமும் எதையும் தாங்கும் இதயமும் நல்கியவன். என்னைப் பல்வேறு பாங்கில் தமிழ்ப்பணியில் ஈடுபடுத்தி வருபவன், சமய நூல்கள் வெளிவரக் கணிசமான அளவு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின்மூலம் நிதிவழங்கத் திருவருள் புரிந்தும், பிறநூல்கள் வெளிவரத் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் ஏதோ ஓரளவு நிதி கிடைக்க வழியமைத் துத் தந்தும் என்னை வாழ்வித்து வருபவன். இந்த வேங் கடத்து எழில்கொள் சோதியினை ,

உளன் கண்டாய், நல்நெஞ்சே!

உத்தமன்: என்றும் உளன்கண்டாய் உள்ளுவார்

உள்ளத்து உளன்கண்டாய்: