பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி விழாக்கள் 195

1943-44இல்தான் மூன்றாம் ஆண்டுவிழா முதன் முதலாகக் கொண்டாட வேண்டும் என நினைத்தேன். தக்கார் ஒருவர் தலைமையில் நடைபெற வேண்டும் என நினைத்தேன். அக்காலத்தில் குளித்தலை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் திரு, T, C சகங்காத ரெட்டியார் என்பவர். நான் திருச்சியில் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது இலால்குடியில் பணி யாற்றினவர். இவர் மூலம் முயன்று தவத்திரு சித்பவாகந்த அடிகளை அழைத்தேன். அவர் கருணை கூர்ந்து ஒப்புக் கொண்டார் அக்காலத்தில் திருப்பராய்த்துறையில் இப் போதிருப்பது போன்ற இராமகிருஷ்ண தபோவனம் விவேகானந்த வித்தியாவனம் இல்லை. ஒரு சிறு குடிலை அமைத்துக் கொண்டு திருவுள்ளத்தில் இத்தகைய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று கருதிக்கொண்டு இருக்கவேண்டும். அக்காலத்தில் திருச்சி இ.ஆர். உயர்நிலைப் பள்ளியில் வாரந்தோறும் கீதைச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தார். இவை அறிஞர்.உலகத்தையும் ஆத்திக உலகத்தையும் கவர்ந்தன. திரு. சகந்நாத ரெட்டியார் இவற்றைக் குழித்தலையிலிருந்து வந்துகேட்டுப் பெரும் பயனை அடைந்தவர்,

அடிகள் ஆண்டு விழாவில் தலைமை தாங்கி நிகழ்த்திய உரை என்னை விவேகாநந்த அடிகளே மீண்டும் பிறவி எடுத்து பேசுவது போலிருந்தது. அன்றுமுதல் அவர் இறைவன் திருவடி நிழலை அடைந்தவரை அவர் எனக்கு விவேகாநந்த ராகவே காட்சியளித்தார். துறையூரிலிருந்தபோதும் காரைக் குடியிலிருந்த போதும் ஆண்டுக்கு ஒரிருமுறை அடிகளைச் சேவித்து ஆசிபெற்று வந்தேன். அவரது அருட்கண் நோக்கால் பெற்ற பயனை இந்தக் குமிழியில் வெளியிட முடியாது; சொற்களால்விளக்க முடியாது. இந்த விழாவை