பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நினைவுக் குமிழிகள்-2

அடுத்து ஐந்து விழாக்கள் நடைபெற்றன. எல்லாம் மிகப் பெரிய அளவில் நடைபெற்றன. எல்லாவற்றையும் நினைவு கரமுடியவில்லை,

டாக்டர் T.S.S. ராஜன், ஒரு விழாவுக்கு டாக்டர் T.S.S. ராஜன் (நலவாழ்வியல் அமைச்சராக இருந்தவர்) தலைமை யேற்றார். அக்காலத்தில் திரு. ஈய்ங்கோய் மலையில் வாசம், நேரில் சென்று வருவதை உறுதி செய்து கொண்டேன். டாக்டர் மிக சுவையுடன் உரையாடுபவர். இவரிடம் பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. அரசியல், சமூக இயல், நாட்டு நடப்புகள் போன்றவற்றில் ஏராளமான செய்திகளை அள்ளி வீசுவார், வீட்டில் அரிசனங்களைத்தான் வேலைக்கு வைத்திருந்தார். உணவு முறைகள், பரிமாறும் முறைகள் மேனாட்டு முறை உணவு விடுதிகளில் இருப்பது போல் இருந்தது, நல்ல பிசுகோத்துகள், ரொட்டித் துண்டு கள், உயர்ந்த அய்யங்கார் காஃபி இவற்றை ஒரு அரிசன சமையற்காரன்தான் பரிமாறினான். காவிரி நீரைத் தேக்கி ஒரு வாய்க்கால் வழியாகத் தம் பண்ணைக்குக் கொண்டு சென்று பண்ணையை மிகச் செழிப்புடையதாகச் செய் திருந்தார். பொட்டல் நிலத்தை வாங்கித் திருத்தம் செய்து வளமாக்கப்பெற்ற நல்ல பண்ணை இது. நெல்லும் வாழை யும் பயிரிடப் பெற்றிருந்தன. நிலத்தைச் சுற்றிக் காட்டி னார், இந்த விழாவுக்குப் பன்மொழிப் புலவர் வே. வேங்கட ராஜா ரெட்டியார் வந்திருந்தார். 'கம்பனில் புதுமை' என்ற தலைப்பில் பேசியது நினைவில் உள்ளது. கம்பனில் புதுமையான பல இடங்களைக் காட்டி மகிழ்வித்தார். ஓரிடம் நினைவிற்கு வருகின்றது.

இராவணன் சீதாப்பிராட்டியைப் பற்றிக் கொண்டு தேரோடு போம்போது இரிசியமுகபர்வதத்தருகில் பிராட்டி தன் அணிகலன்களைக் கழற்றி எறிய, அவற்றை அங்கிருந்த வானரவீரர்கள் கண்டு பொறுக்கிச் சேமித்து வைத்திருந்த செய்தியைக் கம்ப நாடன்,