பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி விழாக்கள் 199

கடுந்தே ரிராமன் உடன் புணர் சிதையை வவித்தகை யரக்கன் வவ்விய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை யிழைப்பொழிந் தாஅங்கு துறாஅ அருநகை யினிதுபெற் றிதமே." (எஞ்சா - வலிகுன்றாத; மரபு - முறை; வகுத்தவல்ல - செயற்படாததான அருங்கல - பெறற்கரிய அணி கலன்; வெறுக்கை - செல்வம்; விரல் செறி மரபின் - விரலில் அணியத் தருவன; செவித் தொடக்குநர் - காதில் அணிபவர்; செவித் தொடர் மரபின - காதில் அணிபவை; விரல் செறிக்குநர். விரலில் அணிபவர்; அரைக்கமை மரபின - இடுப்பில் அணிபவை: மிடற்று யாக்குநர் - கழுத்தில் அணிபவர்; மிடற்றமை மரபின - கழுத்தில் அணிபவை; அரைக்கு யாக்குநர் - இடை யில் கட்டிக் கொள்பவர்; அரக்கன் - இராவணன்: நிலம்சேர் மதர் - நிலத்தில் வீழ்ந்த, பெருங்கிளை - பெரிய சுற்றம்; எவ்வம்-துன்பம்; அறாஅ-நீங்காத : அருநகை - அரிய மகிழ்ச்சி) பிராட்டி இடைவழியில் கழற்றி எறிந்த அணிகலன்களை வானரர் கண்டெடுத்து அவற்றை அணியும் முறை அறியா கமல் விரலணிகளைச் செவியிலும், செவியணிகளை விரலிலும், அரையணிகளைக் கழுத்திலும், கழுத்தணிகளை இடுப்பிலுமாக மாறியணிந்தனர் என்ற இராமாயணச் செய்தியை உவமைப்படுத்தியிருப்பதைக் காணலாம். இதனால் குரங்குக் கூட்டங்கள் அவ்வணிகலன்களைக் கண்டெடுத்தன என்பது, அவற்றைப் பிறர் பரிகாசிக்கும்படி மாறி அணிந்து கொண்டன என்பதும் தமிழ் நாட்டில் வழங்கின. பழைய வரலாற்று வழக்காகவே தெரிகின்றது.

4. புறம் -378.