பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி விழாக்கள் 203

திருந்தேன். அதிகாலையில் 5; மணிக்கு வரும் விரைவு இருப்பூர்தி வண்டியில் திருச்சி வந்து மேல் வகுப்புப் பயணி கள் தங்கும் துறையில் காலைக் கடன்களையும் நீராடலை யும் முடித்துக் கொண்டு தயாராக இருக்கும்படியும், நான் ஒரு மாணாக்கனை அனுப்புவதாகவும் எழுதியிருந்தேன். அப்போது எங்கள் பள்ளியில் 9-வது வகுப்பில் (ஐந்தாம் படிவம்) சீனி. இராச மாணிக்கம் என்ற மாணவன் இருந் தான் பொதுத் தொண்டில் விருப்பார்வமாக இருப்பான். வெட்டிக் கொண்டுவா’ என்றால் கட்டிக் கொண்டு வந்து' விடுவான். இவனுக்கு டாக்டர் மு.வ. வைத் தெரியாது. ஒரு யுக்தி செய்தேன். அக்காலத்தில் சென்னையில் நடைபெற்ற மாகாணத் தமிழ் ஆசிரியர் மாநாட்டு அறிக்கையின் ஒருபடி என்னிடம் இருந்தது. அட்டையின் முன்பக்கத்தில் ரா பி. சேதுப் பிள்ளை, டாக்டர் மு.வ. சேர்ந்திருக்கும் படம் ஒன்றிருந்தது. இராச மாணிக்கத்துக்கு மு வவை அடை யாளம் காட்டி அனுப்பியிருந்தேன். அவனும் மணவாளன் ஒட்டுநராக இருந்த பேருந்தில் வசதியாகக் கொண்டு வந்து சேர்த்தான். அன்றிரவே திரும்புவதற்கும் இட ஒதுக்கீடு செய்து கொண்டுவந்திருந்தார். விழாவின் இறுதி கட்டத் தில் (நாடகம் தொடங்குவதற்கு முன்) இரவு உணவை முடிக்கச் செய்து மணவாளன் பேருந்தில் முன் இடத்தில்’ அமரச் செய்து இருப்பூர்தி நிலையத்திலேயே கொண்டு சேர்க்கும்படி ஏற்பாடு செய்தேன். அவரும் இருப்பூர்தியில் ஏற்றிவிடும் பொறுப்பு வரையிலும் ஏற்று அதைத் திறம்படச் செய்தார். திரு. மணவாளன் நற்குணம் படைத்தவர். (இன்று 14-11-89 இல்) அவர் இல்லை. துறையூர் ஆசிரியர் பெரும்பாலோரிடம் நன்கு பழகுபவர், மாணாக்கர்கட்குப் பல உதவிகள் செய்பவர். என்மீதும் எங்கள் பள்ளி மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தவர் ,