பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்பவானந்த அடிகள் 205

சமயம் பார்த்தபோது விழாக்களுக்கு ஒரு தடவை கூட வரவில்லையே? ஏன்? என்று கேட்டேன். உங்கள் துரை யும் நானும் எதிரிகள். அவரிடம் பேசுவதில்லை. அவர் முகத்தில் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க விருப்ப மில்லை. நீங்கள் தவறாகக் கருதமாட்டீர்கள் என்பதை அறிவேன்' என்றார். மூன்றாண்டுகள் பார்த்தேன்; வராத வர்களின் பெயர்களைப் பதிவேட்டிலிருந்தே நீக்கிவிட்டேன். "வீண் சிரமம் வேண்டாம் என்பது என் கொள்கையேயன்றி அனுப்பாதது வெறுப் பாலன்று. வழக்கறிஞர்கள் (பிராமணர் கள்) இருவர் வீட்டில் நடைபெற்ற திருமணத்திற்கு அழைப்பு அனுப்பி இருந்தனர். சென்று வந்தேன். அவர் கள் ஒன்பது ஆண்டுகளில் ஒராண்டில் கூட வாராதது வருத்தம்தான். பெற்றோர்கள் என்ற முறையிலாவது வந்திருக்கலாம். அதையும் கருத்தில் கொள்ளாதிருந்தது தான் வியப்பு. இந்தப் பள்ளியில் ஒர் பிராமண இளைஞன் தலைமையாசிரியனாக இருந்திருந்தால், பெரும்பாலோர் வந்திருப்பர் என்பது என் கணிப்பு. இந்த உட்கிடக்கையை யெல்லாம் நன்கறிந்த தந்தை பெரியார் நீண்ட காலம் வாழ்ந்திருந்து இந்த அக்ரகாரக் கோட்டையைத் தகர்த் தெறிய வேண்டும் என்று அப்போது நினைத்துக் கொண்டேன். இன்றைய நிலை வேறு. பிராமண இளைஞர்களில் பெரும்பாலோர் நன்கு கலந்து பழகுகின்ற னர். வெளித் தோற் றத்திலாவது நன்றாகப் பழகுவது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது.

. குமிழி-91 27. சித்பவானந்த அடிகள்

1940-வாக்கில் சித்பவானந்த அடிகள் பெரிய நாய்க்கன் பாளையத்தில் தொடங்கிய பணியைத் துறந்து திருச்சியருகேவுள்ள திருப்பராய்த்துறையில் தம் தவப்பணி