பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்பவானந்த அடிகள் 20?

முதன்முதலாகச் சிறிய குடிலை அமைத்துக் கொண்டு தொடங்கப் பெற்ற இராமகிருஷ்ண தபோவனம் மிகப் பெரி தாக வளர்ந்து விட்டது. இதன் ஆதரவில் தொடங்கப் பெற்ற விவேகாந்தர் வித்தியாவனம் (உயர்நிலைப்பள்ளி) சுமார் ஐம்பது ஆண்டுக் காலமாகச் சீரும் சிறப்புமாக நடை பெற்று வருகின்றது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் சிறுவர்கள் இங்குக் கல்வி பெற்று நல்லொழுக்க முள்ளவர்களாகத் திகழ்கின்றனர். 1943-இல் துறையூர் உயர் நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் அடிகள் பங்கு பெற்றதி லிருந்து அடியேன் அடிகளின் திருவருளுக்குப் பாத்திர மானேன். அடிகளார் தமிழகமெங்கும் நடத்தி வந்த மூன்று நாள் அந்தர்யோகத்தினால் தமிழகத்தில் எண்ணற்ற சிறுவர் கள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆன்மிகத் துறையில் நாட்டமுடையவர்களாயினர்.

நான் துறையூரில் பணியாற்றியபோது-1945- என நினைக்கின்றேன் - தபோவனத்தில் நடைபெற்ற மாணவர்க் கென நடத்தப்பெற்ற அந்தர்யோகத்தில் மூன்று மாணவர் களைப் பங்கு கொள்ளச் செய்தேன்; அடியேனும் பங்கு கொண்டேன்; அன்றுமுதல் அடிகளாரின் திருவருள் என்மீது பாய்ந்து வருகின்றது. ஒரு சமயம் அடிகளார் என்னிடம் சொன்னது: ரெட்டியார், உங்கட்கு மனநிலை சரியாக இல்லை என்ற நிலை ஏற்பட்டால் நீங்கள் தபோவனத்தில் வந்து 15 நாட்கள் தங்கிப் போகலாம்’ என்று, அடிசளாரின் திருவருளால் இன்றுவரை (1989) என் மனநிலை கெட வில்லை: நானும் அங்கு 15 நாட்கள் தங்கவும் இல்லை. ஆயினும் திருப்பதி சென்றபிறகும் கூட திருச்சிப் பக்கம் வரும்போது அடிகளாரைச் சந்தித்து அவர்தம் ஆசிபெறு வதில் தவறுவதில்லை. அந்தர்யோகத்தின் போது கேள்வி. நேரத்தில் அடிகளாரை வினவிய வினாவும் அவர் அளித்த விடையும் இன்னும் என் மனத்தில் பசுமையாக உள்ளது.