பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்பவானந்த அடிகள் 2} i.

காஃபி, தேநீர் போன்ற பானங்கள் வழங்கப்படுதல் இல்லை. அவற்றிற்குப் பதிலாக மால்ட்கலந்தபால் பானமாக வழங்கப்பெறும். காலைச் சிற்றுண்டியுடனும், மாலை சிற்றுண்டியாக வழங்கப்பெறும் சுண்டலுடனும் (பச்சைப் பயறு, தட்டைப்பயறு, கொண்டைக் கடலை, மொச்சை போன்றவை) இப்பானம் வழங்கப்பெறும். வெளியில் எதையும் வாங்கித் தின்னக் கூடாது என்பது விதி, ஏதாவது, நோய் தொற்றினால் அதன் மூலத்தைக் கண்டறிய முடியாது என்பதற்காகத்தான் இந்த விதி. ஆனால், சிறுவர்கள் துட்டு கொடுத்து வாங்கி உண்ண வேண்டும் என்று விரும்புவது இயல்பு. அதனால்தான் அடிகள் பெற்றோர்கள் தம் சிறுவர் களிடம் பைப்பனமாக (Pocket money) எதுவும் தரக் கூடாது என்று சொல்வியிருந்தாலும் அந்தக் காலத்தில் வாரம் ரூ. 21. வீதம் வைத்துக் கொள்ள அனுமதித்தார், இவர்கள் வாங்கி உண்பதற்காக சாக்லட், மிளகு மிட்டாய் போன்ற இக்காலப் பொருள்கள் கிடைக்குமாறு தபோவனத் திற்குள்ளே ஒருகடை திறந்து வைக்க ஏற்பாடு செய்தார். இது ஒரு சாமியார் பொறுப்பில் விட்டு வைத்தார். உணவு விடுதியில் உணவு தயாரிக்கும் முறை ஒரு சாமியாரின் பொறுப்பிலிருந்தது.

தபோவனம், உணவுவிடுதிக்குப் பால் வேண்டுமல்லவா? காங்கேயம், ஜெர்ஸி, சீமைப்பசு மாடுகள் 30 வரை பராமரிக் கப் பெற்றுவந்தன. இவற்றைக் குளிப்பாட்டுவது, உயர்ந்த வகைத் தீவனங்கள் தருவது, பச்சைப்புல் போன்றவற்றை இடுவது போன்ற பொறுப்புகள் ஒரு சாமியார் கவனித்து வந்தார். காய்கறித் தோட்டம் ஒருவர் பொறுப்பிலும். நீச்சல் குளத்தைக் கவனிப்பது ஒருவர் பொறுப்பிலும், உணவு தயாரிப்பதற்கு வேண்டிய மாவு முதலியவை தயாரிப்பது ஒருவர் பொறுப்பிலுமாக இருந்து வருகின்றது, ஒவ்வொருவர் திறமைக்கேற்ப பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப் பெற்றிருந்தன. w