பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 நினைவுக் குமிழிகள்-2

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்,' என்ற குறட்பாவிற்கு எடுத்துக்காட்டு அடிகள் என்று கூறின் அது மிகையன்று.

ஒழுங்குமுறை : மாணவர்களிடம் ஒழுங்கு முறையை வளர்ப்பதில் அடிகளார் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதிகாலையில் எழுந்து படித்தல், ஆற்றிற்குச் சென்று நீராடுதல், சிற்றுண்டி அருந்தல், ஆசிரியர்கள் தந்த வீட்டு வேலைகளைக் கவனித்தல், பள்ளிக்குப் போதல் - இவற்றிற் கெல்லாம் காலவரையறை வகுக்கப் பெற்று அதன்படி மாணாக்கர்கள் நடந்து வந்தனர். சிற்றுண்டி முதலிய வற்றை முடித்துக் கொண்டு வீட்டு வேலை செய்யாதவர்கள் பொது மண்டபத்திற்கு முற்பகல் 8-30க்கு வந்து செய்ய வேண்டும். செய்வதில் சிரமம் இருப்பின் இதைக் கவனித்து உதவுவதற்கென்றே சில ஆசிரியர்கள் அந்த நேரத்திற்கு வருவர்: இம்முறையை மேற்பார்வைப் படிப்பு (Supervised Study) என்ற முறையை ஒத்ததாகக் கொள்ளலாம். சிலருக்குச் சில பாடங்களில் பிற்போக்கு நிலை ஏற்பட்டிருந் தால் அவர்கட்குத் தனியாகக் கவனிக்கவும் ஏற்பாடு உண்டு. இதற்கென்று ஓரளவு கட்டணம் ஆசிரியர்கட்குத் தரப் பெறும்.

9.30 மணியிலிருந்து மாணவர்கள் பள்ளியை நோக்கிக் செல்வர். ஒவ்வொருவரும் அடிகள் இருக்கும் அறைக்குச் சென்று அவரைப் பார்த்த பிறகுதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற முறையும் உண்டு. அடிகள் ஒவ்வொரு வரையும் கவனிப்பார்: ஆடையில் தூய்மை, சட்டையில் பொத்தான்கள் பொருத்தப் பெற்றுள்ளனவா, நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம் ஏதாவதொன்று இடப்

1. குறள் - 517 (தெரிந்துவினையாடல்)