பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்பவானந்த அடிகள் 243

பெற்றுள்ளதா என்று கவனிப்பார். சத்துக் குறைவுள்ளவர் கட்கு சத்துள்ள மாத்திரை, இலேகியம் முதலியவை அடிகளாலேயே தரப்பெறும். கீழ்வகுப்பு மாணவர்களாக இருப்பின் அவரே அவர்கள் வாயில் போட்டு மகிழ்வார். இவ்வாறு மாணவர்கள் அடிகளாரைப் பார்த்துச் செல்வது "மெய்காட்டி' என்ற பெயரில் வழங்கப் பெற்று வருகின்றது.

1945-இல் நான் அந்தர் யோகத்திற்காகச் சென்றிருந்த போது தபோவனப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள் வதற்கு 12 பேர்களை நியமித்து இருந்தார். அப்போது இவர்கள் வெள்ளாடை உடுத்திய தொண்டர்கள். அப்போது இரண்டாண்டுகட்கு முன்னர் மாணவர்கள் அந்தர் யோகத் தில் பங்கு பெற்றவர்களில் இருவர் இலால்குடி உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்கள். ஒருவர் பெயர் ராமுடு; மற்றொரு வர் கிட்டு (?), இவர்கள் ஒன்றுவிட்ட சகோதரர்கள். இவர்கள் தமக்குரிய சொத்தின் பங்கைத் தபோவனத்தில் செலுத்திவிட்டுத் துறவிகளாகும் நோக்கத்துடன் வந்து சேர்ந்தவர்கள். ராமுடு தபோவன அலுவலக மேலாளர் பொறுப்பில் இருந்தார்; கிட்டு மாணவர்கட்கு வேண்டும் பொருள்களை விற்கும் கடையைப் பார்த்துக் கொண் டிருந்தார்.

நினைவில் உள்ள சில கிகழ்ச்சிகள் : தபோவன வாழ்க்கையை நினைக்கும்போது சில நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன.

(i) தொடக்கக் காலத்தில் விடுதி மாணவர்களைத் தவிர ஊர் மாணவர்கள், பக்க ஊர் மாணவர்கள் சேர்ந்து படித்தனர். இது மாணவர் ஒழுங்குமுறைக்குச் சிரமமாக இருந்தது. இதனால் திருப்பாராய்த் துறை (ஊரில்) இத்தகைய மாணவர்க்கெனத் தனிப் பள்ளியைத் தொடங்