பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நினைவுக் குமிழிகள்-2

கினர். பி.எஸ்சி யில் என் வகுப்புத் தோழராக இருந்த சண்முகம் என்பவர் இப்பள்ளியின் தலைமையாசிரியராக

இருந்தார்.

(2) ஒரு சமயம் 4, 5, 6ஆம் படிவங்களில் பிரச்சினை எழுவதால் மகளிர் கலந்து படிக்கும் முறையை நீக்க நினைத் தார். ஒரளவு குடியரசு முறையை மேற்கொள்ளும் அடிகளார் மேல் வகுப்பு மாணவர்கள் குழுவில் இப் பிரச்சினையை வைத்து அவர்கள் கருத்துகளைக் கேட்டார். எவரும் துணிவாகக் கூறலாம் என்றும் உரிமை கொடுத்தார். ஒரு மாணாக்கன் எழுந்து மகளிர் ஒன்று சேர்ந்து படிப் பதால் சிலர் மனம் தவறான சிந்தனையில் இறங்கும். இதற்கு வழியமைத்து விட்டு எங்கள்மேல் குற்றப் பத்திரிகை வாசிப்பதைவிட மகளிர் கலந்து படிக்கும் முறையை அறவே நீக்குதல் நன்று” என்று சொல்ல, எல்லோரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர். அடுத்த ஆண்டே ஆடவர்-மகளிர் கலந்து படிக்கும் முறை நீக்கப் பெற்றது.

(3) ஒரு சமயம் கழிப்பறைக்கு நீர் ஊற்றுவதை மாணாக்கர்கள் மறுத்தனர். அடிகளார். இதற்கு ஆள் போட்டுச் செய்யத் தெரியாதவர் அல்லர். முறையாகவுள்ள இதில் ஒரு மாணவருக்கு 4, 5 தடவை வரும், அடிகள் மாணவர்களை நோக்கி நீங்கள் செல்வர் வீட்டுப் பிள்ளைகள். இப்பணியைச் செய்தல் நன்றன்று. நான் துறவி எனக்கு உயர்ந்தது, தாழ்ந்தது என்ற வேறுபாடு, இல்லை. இப்பணியை நானே செய்கின்றேன்' என்று கூறி பணியில் இறங்கினார். மாணாக்கர்கள் அழாத குறையாக அடிகளாரை விலக்கித் தாமே செய்யத் தொடங்கினர்.

(4) விடுதி மாணவர்க்கு உடற் பயிற்சி அவசியம் என்ற கட்டாயம் இருந்தது. சுமார் 500 மாணவர்கள் ஒரே சமயம்