பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 - நினைவுக் குமிழிகள்-2

சிற்றுண்டி சாலையில் சிற்றுண்டி, காஃபி கொண்டோம், இன்று (நவம்பர்-1989) அடிகளும் இல்லை; சாந்தாநந்தாவும் இல்லை. அடிகள் சில ஆண்டுகட்குமுன் தான் இறைவன் திருவடிப் பேறு அடைந்தார்கள்; சாந்தாநந்தா ஏழு ஆண்டு கட்கு முன் திருநாடு அலங்கரித்தார். அடிகளை 1966-க்குப் பிறகு (ஒர் இருபதாண்டுக் காலம்) சந்தித்து ஆசி பெறும் பேறு பெறவில்லை.

பொருளு.ை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும் தெருள் உடை யோரை முகத்தினும்

தேர்ந்து தெளிவதுபோல் அருள் உடை யோரைத் தவத்தில்

குணத்தில் அருளில் அன்பில் இருள் அறு சொல்லினும் காணத் தகும்கச்சி ஏகம்பனே."

- பட்டினத்தார்

குமிழி-92

28. மூன்று மாநாடுகள்

நான் துறையூரில் பணியாற்றியபோது தமிழகத்தி லுள்ள தமிழறிஞர்களையெல்லாம் பள்ளிக்கழைத்து பேசச் செய்து மாணவர்க்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற பேரவா என்னிடம் நிரந்தரமாகவே குடிகொண்டிருந் தது. எப்படியோ அண்மையிலிருந்தவர்கள்ை வரவழைக்க முடிந்தது; தொலைவிலிருந்து டாக்டர் மு.வ. (அக்காலத்தில் அவர் டாக்டர் இல்லை) பன்மொழிப் புலவர் வே. வேங்கட ராஜுலு ரெட்டியார் இவர்கள் சென்னையிலிருந்து வந்து

1. திருஏகம்ப மாலை-15