பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 நினைவுக் குமிழிகள்-2

கொண்டதால், இந்த இடத்தை நன்கு தூய்மை செய்து புது மணல் பரப்பி இயன்றவரை இருக்கை வசதிகள் செய்தேன். பேருந்துகள் சற்றுக் கீழ்புறமாக ஒதுங்கிச் செல்லவும் காவல் துறையினரின் உதவியால் ஏற்பாடுகள் செய்தேன். இலால்குடி நடேச முதவியார் பேசினார்; வேறு சிலரும் பேசினார்கள். இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் பூ. ஆலால சுந்தரம் செட்டியார். நல்ல புலமை மிக்க செட்டியாரின் பேச்சைக் கேட்டுத் துறையூர் மக்கள் மகிழ்ந்தனர். புலமைக்கு மேலாக செட்டியார் மக்களிடம் அன்போடு பழகிய முறை யும், அவருடைய உயர்ந்த பண்பாடும் என்னை மிகவும் சர்த்தன. துறையூரை விட்டுக் காரைக்குடி சென்ற பிறகு ஒரு பத்தாண்டுகள் இவர் தொடர்பு அறுந்தது. 1960இல் திருப்பதி வந்த பிறகு செட்டியாரின் தொடர்பு வந்தது. பல்கலைக் கழகப் பாடநூல் குழுவில் உறுப்பினராக இருந்த மையால் அடிக்கடி வந்து போகும் வாய்ப்பும் அவருக்கு இருந்தது. நானும் தேர்வுக் குழு கூட்டத்திற்கு சென்னைக்கு வந்து போனேன். இக் கூட்டம் செட்டியாரின் இல்லத்தி லேயே நடைபெறும். இன்முகத்துடன் விருந்தோம்பும் இல்லத்தரசியின் பண்பும், அன்புடனும் மரியாதையுடனும் பழகும் செட்டியார் மக்களின் போக்கும் என்னை மிகவும் கவர்ந்தன 'குலத்தளவே ஆகும் குணம்’ என்பது ஆன்றோர் வாக்கல்லவா? - -

திருச்சி மாவட்ட ஆசிரியர் மாநாடு : இது ஒரு முறை துறையூரில் நடைபெற்றது. துறைவூர் சினிமாக் கொட்ட கையில் இடம்பெற முடிந்ததால் முற்பகல் பிற்பகல் நிகழ்ச்சி கள் அருமையாக நடைபெற்றன. சென்னையிலிருந்து பச்சை யப்பன் கல்லூரிப் பேராசிரியர்கள் திரு. அ. மு. பரமசிவா கந்தம், திரு. அன்பு கணபதி இவர்கள் வந்திருந்தார்கள். இந்த மாநாடு நடைபெறுவதற்கு வேண்டிய வசதிகள்