பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று மாநாடுகள் 219

செய்யும் பொறுப்பு என்னிடம் இருந்தது. ஆசிரியர் கூட்டம் திரண்டிருந்தது. இந்த இரண்டு மாநாடுகளும் நாடு விடுதலை பெறுவதற்கு முன்நடைபெற்ற மாநாடுகள். இலால்குடி கழக உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் ப. அரங்கசாமி இம்மா நாட்டை அமைப்பதில் பெரும்பங்கு கொண்டார் என்பது இன்றும் என் நினைவில் பசுமையாகவே உள்ளது. இவர் ஓய்வு பெற்று இலால்குடியில் வாழ்ந்து வருகின்றார். 1965-இல் நான் ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களைச் சேவித்து வரும்போது திருச்சி மாயூரம் உணவு விடுதியில் என் இளையமகனுடன் தங்கித் திரு அரங்கம், உறையூர், உத்தமர் கோயில் திருவெள்ளறை, அன்பில், திருப்பேர் நகர்(கோயிலடி அப்பக் குடத்தான் சந்நிதி) இவற்றைச் சேவித்தேன். ஒரு நாள் பிற்பகல் அன்பில் பெருமானைச் சேவித்துவிட்டுக் கொள்ளிடத்தை நடையிலேயே கடந்து அப்பக்குடத்தானைச் சேவித்தேன். (இப்பயணம் திருப்பதியில் பணியாற்றியபோது, செப்டம்பர் விடுமுறையில் காரைக்குடி வத்தபோது நடை பெற்றது). திரும்பும்போது, திரு. ப. அரங்கசாமியைச் சந்தித்து அளவளாவினேன். பழைய நண்பர்களைப் பார்த்து அளவளாவும் பண்பு என் குருதியில் கலந்திருக்கின்றது. இதனைக் காரைக்குடி அழகப்பா கல்லூரிப் பேராசிரியர் பூ அமிர்தலிங்கம் அவர்களும்,

பழந்தோழர் தமைக்கண்டு

பாசமுடன் அரவணைத்து... என்றும்,

நண்பர்களின் மத்தியிலே

நகைத்துமகிழ் பேறுடையான்..." என்றும் கூறியுள்ளதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். இந்தப் பண்பு என்னை உந்தக் கொள்ளிடத்தைக் கடந்து

1. டாக்டர் க. சுப்புரெட்டியார்.மணிவிழா மலர்,பக். 64.