பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 நினைவுக் குமிழிகள்-2

லால்குடி வீதியில் நடந்து வரும்போது நானும் என் மகன் இராமகிருஷ்ணனும் (அப்போது 3-வது படிவ மாணவன்; இப்போது M. D. படித்து பெரிய டாக்டர், திரு. ப. அரங்கசாமியின் வீட்டை அடைந்தோம். அரைமணி நேரம் அளவளாவிய பிறகு விடைபெற்று திருச்சியில் தங்கி யிருந்த விடுதியை அடைய நினைத்தேன். திரு. அரங்கசாமி ஏதாவது உணவு கொள்ளாது அனுப்ப மறுத்தார். நான் இரவில் உணவு கொள்ளாதவனாதலால் எனக்காக உப்புமா தயார் செய்தார்கள். என் மகன் உணவையும் மறுத்தான்; உப்புமா கொள்ளவும் மறுத்தான். அகாலமாகி விட்டது திருச்சியை அடைய. ஒரு விடுதியில் ஆறிப்போன இரண்டு தோசைகளை உண்ண வேண்டியதாயிற்று,

துறையூர் வட்ட ஆசிரியர் கூட்டு இணைவு மாகாடு : துறையூர், அதன் சுற்றுப்புற ஊர்களிலுள்ள உயர்நிலைப் பள்ளி, தொடக்க மேல்நிலைப்பள்ளி (Higher Elementary School) தொடக்கப்பள்ளி இவற்றின் ஆசிரியர்கள் ஒன்றுகூடி துறையூர் ஆசிரியர் கூட்டு இணைப்பு (Turaiyur Teachers Federation) என்ற ஓர் அமைப்பைத் தொடங்கி என்னை அதன் தலைவராக்கினார்கள். அவசியமானபோது இதன் நிர்வாகக்குழு கூடி முக்கியமான செயல்களைப் பற்றிய முடிவு எடுக்கும். அக்காலத்தில் திருச்சி மாவட்ட ஆசிரியர் களின் சங்கத் தலைவராக இருந்தவர் தேசியக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் (துணை முதல்வர்) A. இராமய்யர் என்பவர்.

1948 என்று நினைக்கின்றேன். சுதந்திரம் பெற்ற மறு ஆண்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் மாநாடு திண்ணனூரில் நடைபெற்றது. இந்தச் சிறிய ஊர் திருச்சி துறையூர் நெடுஞ் சாலையில் துறையூரிலிருந்து 12வது கல் தொலைவிலுள்ள பெரமங்கலம் என்ற சிற்றுாரிலிருந்து பிரியும் கிளை சாலையில் மூன்று கல் தொலைவிலுள்ளது. யாரோ ஒரு பெரிய தேச