பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று மாநாடுகள் 323

களும் நாட்டின் அடிப்படைத் தொண்டர்கள்’ என்றாவது நினைத்து மனிதாபிமானத்துடன் மறுமொழி கூறியிருக் கலாம்; அது செய்யவில்லை, வருங்காலத்தில் தலைக்கேறி நிற்கும் இந்த ஆணவத்தால் என்னென்ன 'திருவிளையாடல் கள் நடைபெறப் போகின்றதோ என் சிறுமணம் எண்ணத் தொடங்கியது; உடனே அதையும் மறந்தது.

எப்படியாவது அமைச்சரை மடக்கி மாநாட்டில் பேச வைக்க வேண்டும் என்ற எண்னம் என் மனத்தில் உதித்தது. மாநாட்டுத் தலைவர் இராமய்யரிடம் இதைத் தெரிவித்தேன். இளமைத் துடுக்கில் எதையும் செய்யக் கூடாதல்லவா? அநுபவம் மிக்க தலைவர் இருக்கும்போது வால் ஆடலாமா? திரு. இராமய்யர் என் நோக்கத்திற்குப் பச்சைக்கொடி காட்டினார். சுமார் மாலை 4 மணிக்குக் காங்கிரஸ் மாநாடு முடிந்து தலைவர்கள் கலைந்து திரும்பத் தொடங்கினர். ஆசிரியர் மாநாடு ஒரு புளியந்தோப்பில் நடைபெற்றது. சாலையின் மேல்புறம் சுமார் 4 அடி பள்ளத்தில் இந்தத் தோப்பு இருந்தது. வாகனங்களை நகரவிடாது நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் தடுத்து நின்றனர். 'கல்வி அமைச்சர் வாழ்க’ என்ற முழக்கம் விண்ணை எட்டியது. 'அமைச்சரைட் போகவிடோம் என்ற முழக்கமும் தொடர்ந்தது. ஆசிரியர் மாநாட்டில்’ என்ற ஒரு கூட்டம் முழங்க, மற்றொரு கூட்டம் 'அமைச்சர் பேசவேண்டும்" என்று எதிரொலித்தது.

காங்கிரஸ் கூட்டம் தம்பித்துப் போயிற்து. அமைச்சர் அவிநாசி லிங்கம் செட்டியார் காரிலிருந்து குதித்தார்; ஆசிரியர் கூட்டத்தை நோக்கி ஓடினார். வரவேற்ற என் னைக் கட்டித் தழுவிக் கொண்டார். மாநாட்டில் உணர்ச்சியுடன் பேசினார். எங்கள் கோரிக்கைகளை எழுத்து மூலம் அவரிடம் தந்தோம். அன்புடன் வாங்கிக் கொண் டார். புன்முறுவலுடன் கவனிக்கின்றேன்” என்றார்.