பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவட்டக்கல்வியதிகாரிகள் 225

அதிகமான பள்ளிகள் இல்லை கழக நிர்வாகத்தின்கீழ் முசிறி, இலால்குடி, அறியலூர், குழித்தலை என்ற இடங் களில் உயர்நிலைப் பள்ளிகளும், உடையார் பாளையத்தில் ஒரு நடுநிலைப் பள்ளியும்தான் இருந்தன. திருச்சி நகரை நீக்கிப் பார்த்தால் காட்டுப் புத்துாரில் ஜமீந்தார் பொறுப்பில் ஒர் உயர்நிலைப் பள்ளியும், துறையூரில் ஜமீந்தார் மக்கள் பொறுப்பில் வளர்ந்து வரும் உயர்திலைப் பள்ளியும்தான் இருந்தன. திருச்சி நகரில் (திரு. அரங்கம் உட்பட) கிறித்தவர்கள், பார்ப்பனர்கள், பார்ப்பன ால்லாதார் - பொறுப்பில் சில பள்ளிகள் இருந்தன. இதனால் மாவட்டக் கல்வி அதிகாரி ஒருவரே இருத்தார். இன்றைய நிலை வேறு ஏராளமான பள்ளிகள் தோன்றி யுள்ளன. நாடு விடுதலை பெற்ற பிறகு அசுர வேகத்தில் பள்ளிகளும் கல்லூரிகளும் தோன்றியுள்ளதைக் காண் கின்றோம். .

துறையூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியின் தலைமை யாசிரியனாகிய நான் ஒருவனே ஆப்பது வயது கூட தாண்டாத இளைஞன்; மிகவும் கலு:கறுப்பாக இயங்கி வந்தேன். பள்ளி நிர்வாகம் பற்றிய (தாளாளர் பொறுப்பும் சேர்த்து) எல்லாப் பொறுப்புகளும் என்னிடம் விடப் பெற்றிருந்ததால் எல்லா விதிகளையும் நன்கு அறிந் திருந்தேன். நடைமுறையில் அதுபவ வாயிலாகவும் பல விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்புகளும் கிடைத்தன. அன்று முதல் இன்று வரை எந்தப் பிரச்சினையை அணுகினாலும், எந்தத் துறையைப் படித்துப் புரிந்து கொள்ள முயன்றாலும் 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்றபடிதான் இருக்கும். இத்தனைப்

1. குறள் - 1110 நி-15