பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 நினைவுக் குமிழிகள்-2

மாவட்டக் கல்வி அதிகாரிகளும் உள்ளனர். விதிகளின் கீழ்க் காரியங்கள் நடைபெறுவதை விட விதிவிலக்கின் கீழ்தான் அதிகம் நடைபெறுவதை எங்கும் காணலாம். விதிப்படி நடக்கும் பள்ளிகளும் நிரம்ப உள்ளன. விதிகளை மீறும் போதுதான் அரசின் குறுக்கீடுகள் இருக்கும். ஏராளமான பள்ளிகள் தோன்றிவிட்டதால் குறுக்கீடுகள் ஆற்றில் கரைத்த புளி மாதிரி அதிகமாக வெளிப்படுவதில்லை.

அக்கால அதிகாரிகளின் போக்குகள் அவர்களின் த அடி சிறப்புப் பண்புகள் (diocyncrasies) இவை நினைவுக்கு வருகின்றன. இவற்றையும் குறிப்பிடுவேன். நற்குணங் களை அதிகாரிகளின் பெயர் குறிப்பிடும்போதும் ஒவ்வாத குணங்களை பெயர் குறிப்பிடாதும் சொல்வேன். ஒருவர் இரவு உணவுக்கு (Dinner) பட்டியலே (Menu) தருவார். இது எங்கள் பொருளாதாரத் திட்டத்திற்கு ஒவ்வாது இருக்கும். உணவு விடுதிகளில் இவற்றைத் தயார் செய்வதால் பெருஞ்செலவு வரும். என்ன செய்வது? பல்லைக் கடித்துக் கொண்டு பட்டியல்படி உணவு தயாராகும். முகம் திரிந்து, நோக்கக் குழையும் விருந்து' என்றல்லவோ வள்ளுவர் சொல்வியுள்ளார்? . இவர் இரண்டு டசன் சாத்துக்குடி, ஒரு டஜன் ஆப்பிள், இரண்டு வீசை விதை இல்லாத திராட்சை வேண்டும் என்று சொல்லுவார். எல்லாம் அதிகாரியின் பிரதம உதவியாள் ஆளவந்தார் மூலம்தான் சொல்லியனுப்புவார். இவையெல்லாம் துறை யூரில் அக்காலத்தில் கிடைப்பதில்லை. திருச்சியிலிருந்து வாங்கி வருதல் வேண்டும். நாடோறும் திருச்சியிலிருந்து ஆபீஸ் தபால் பெட்டியை ஓர்ஆள் கொணர்வான்; மாலையில் திரும்புவான். ஆளவந்தாரிடம் சொல்விப்பெட்டி கொணரு பவன் மூலம் வரவழைத்துத்தருவேன். இந்தப்பழங்கள் அன்று மாலையில் திருச்சிக்குச் சென்று அதிகாரி வீட்டில் ஐக்கிய மாகிவிடும், . .

{

3. குறள் & 90.