பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவட்டக் கல்வியதிகார்கள் 233

கொண்டது. இந்நிகழ்ச்சி எனக்கு விழிப்பு ஏற்படச் செய்தது. இதில் மிகவும் கவனமாகவும் செயற்பட்டேன். இப்படி இறைவன் என்னை வழுக்கி வீழாபடி காத்தான்.

பிறிதொரு மாவட்டக் கல்வியதிகாரி விருந்தோம்பலில் எதையும் ஏற்றுக் கொண்டார். அவ்வளவாகத் தொந்தரவு இல்லை. ஆனால் நாடோறும் இருப்பத்தைந்து மூட்டைகள் வீதம் வேண்டும் என்று சொல்லியனுப்புவர். இது தவிர: தான் ஆட்டுப்பால் பிரியர் என்றும், அதனால் வீட்டில் இரண்டு ஆடுகள் வளப்பதாகவும், அதற்குப் 10 படி செஞ் சோளம் வேண்டும் என்றும் ஆளவந்தார் மூலம் சொல்வி யனுப்புவார். மனம் கோணாது இவற்றைச் சேகரித்து அனுப்புவேன். இவர் தான் சிறந்த ஆசிரியர்கள், தலைமை யாசிரியர்கள் எனப் பேர்பெற்று ஓய்வு பெற்று எங்கள் பள்ளி யில் பணியாற்றின. இரண்டு ஆசிரியர்களின் வகுப்டைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். அவர்கள் மாவட்டக் கல்வியதிகாரியின் மாதிரி வகுப்பைப் பார்க்கத் தம் விருப்பம் தெரிவித்தார்கள்; நவீன முறையில் கற்பிக்கும் முறைகளைத் தெரிந்து கொள்வதில் தமக்கு அக்கறை மிக்கிருப்பதாகவும் தெரிவித்தார்கள். இதனை நான் மாவட்டக் கல்வி அதிகாரிக்குத் தெரிவிக்கவே, அவர் தமக்குக் கற்பிக்கும் பழக்கமே இல்லையென்று கூறி கையை விரித்து விட்டார்; இவர்கள் வகுப்பைப் பார்ப்பதையும் கைவிட்டார். நம்மிடமும் பனங்காட்டு நரிகள் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். இது எனக்கு ஒரு நல்ல அநுபவமாகவும் இருந்தது.

இறுதியாக ஒரு மாவட்டக் கல்வியதிகாரிக்கு சமையல் காரரை வைத்துச் சமைத்துப் போட்டோம். அவர் தங்கவுங் நளபாகம் செய்யவும் ஊருக்குள்ளிருந்த ஜமீந்தார் சத்திரம் உதவியாக இருந்தது, நன்றாக உண்டு சுகமாகக் காலம் கழித்தார். இவர் விருப்பப்படும்போது குதிரை வண்டி