பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நினைவுக் குமிழிகள்-2

வைத்துப் பள்ளிக் அழைத்து வருவோம். 'ஆசிரியர்கள் நன்கு படித்தவர்கள்; நன்றாகக் கற்பிப்பவர்கள். இவர்கள் வகுப்பை நான் என்ன பார்ப்பது?’ என்று கூறி வகுப்பிற்குள் நுழைந்து பார்ப்பதையே தவிர்த்துக் கொண்டார். 'இராஜ தோரணையில் ஒர் அரைமணி நேரம் என்னிடம் உரையாடி விட்டுத் தம் இருப்பிடத்திற்குத் திரும்பி விடுவார். சமையல் வைத்ததால் சற்றுச் செலவு அதிகமாயிற்று. பள்ளித்துணை ஆய்வாளர்களையும் உணவு விடுதிகட்கு அனுப்பாமல் இவர் சமையலிலேயே உணவு கொள்ளச் செய்து விட்டேன். சிற்றுண்டிகட்கு மட்டிலும் உணவு விடுதியில் ஏற்பாடு செய்து விடுவேன். அக்காலத்தில் நடராச அய்யர் சிற்றுண்டி விடுதி யும் அவர் இளைய சகோதரர் முத்து அய்யர் உணவு விடுதி யும் எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எங்கள் வீடுபோல் இயங்கின. முகாம் முடிந்தபிறகு இவர்கட்குச் சேரவேண்டிய தொகைகளைச் செலுத்திக் கணக்கைத் தீர்த்துக் கொள் வேன். இராமய்ய நாயுடுவின் பொறுப்பில் இதை விட்டு விட்டேன். விருந்தோம்பலில் எங்கள் பக்கத்து ரெட்டியார் கள் பேர் போனவர்கள். ஆதலால் சமையல் நடந்த ஆண்டு முழுப் பொறுப்பையும் உமாபதி ரெட்டியார் கவனித்துக் கொண்டார்.

இறையருளால் நல்ல ஆசிரியர்கள் எனக்குக் கிடைத்த மையால் மனமொத்த நிலையில் நன்கு பள்ளி நடைமுறை யைக் கொண்டு செலுத்த முடிந்தது. அப்பக்கத்திலே சிறந்த பள்ளி என்று பொதுமக்களால் பாராட்டப்பெறும் அளவுக்கு எங்கள் பள்ளி இயங்கி வருவதைக் கண்டு அடிப் கடிப் பெருமிதம் கலந்த மகிழ்ச்சியில் திளைப்பதுண்டு. அடிக்கடிச் சிறுசிறு சச்சரவுகள் இருக்கும். ஒருவர்மீது ஒருவர் ஏதாவது கோள்கள் சொல்லி என் மனம் கெடச் செய்யும் சந்தர்ப்பங்களும் இருக்கும். இவற்றை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுவேன். எனக்கு அதிகமாக