பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ப்புப் பிள்ளையின் சோகக் கதை 239;

அமைக்கப் பெற்றிருந்தன. விழும்போது இருக்கையின் மீது விழுந்து தரையில் விழுந்தானோ, அல்லது நேராகத் தரையின்மீது விழுந்தானா என்பது தெரியவில்லை; சுமார் ஒன்பது அடி உயரத்திலிருந்து விழுந்து விட்டான். இடது கை முழங்கை மூட்டில் பலமான அடி. கையை நீட்டவும் மடக்கவும் முடியாத நிலை ஏற்பட்டது. எலும்பு முறிவு மூட்டில் ஏற்பட்டிருக்க வேண்டும்; வெளியில் இரத்த ஒழுக்கு ஒன்றும் இல்லை; காயமும் இல்லை. சிறுவர்கள் ஓடிவந்து "ஜனகராஜன் விழுந்து விட்டான்” என்று செய்தி தெரிவித்தனர். நான் வீட்டிலிருந்து போவதற்குமுன் அத்தெருவில் சென்றவர்கள் அச்சிறுவனை வீட்டில் கொண்டு வந்து சேர்த்தனர்.

சிறுவனைக் கண்டதும் ஒரே அதிர்ச்சி எனக்கு. மனம் சிந்திக்க மறுத்தது. அருகிலிருந்த சிலர் "சச்சம்பட்டிக்குக் கொண்டு போனால் சரியாகிவிடும்; அங்குள்ள أتيكيtمس மருத்துவர் (Bone-Setter) இத்தகைய சிகிச்சைடில் கை தேர்ந்தவர். எத்தனையோ பேர்களைக் குணப்படுத்திப் பெரும் புகழ் பெற்றவர்’ என்று கூறினார்கள். என்னுடைய பட்டப் படிப்பும் அறிவியல் அறிவும் இதனை ஏற்கமறுத்தன. நாட்டுப் புறத்தில் இத்தகைய கைதேர்ந்தவர்கள் யாவரும் ஒன்றும் தெரியாதவர்கள் என்ற எண்ணம் என் சிந்தையில் மேலோங்கி இருந்தது. இதனால் ஈச்சம்பட்டிக்குப் போகாமல் (15 கல் தொலைவிலுள்ளது இந்த ஊர்; பேருந்து வழி; 2 கல் சாதாரண பாதை: கார் போகும்) உள்ளூரில் நல்ல பேருடன் திகழும் நாராயண அய்யர் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றேன். இங்குச் செல்லாமல் ஈச்சம்பட்டிக்குச் சென்றிருந்தால் பையன் பிழைத்திருப்பான் என்று பின்னர் எண்ணியது என் மனம். பயன்? பையனுக்கு இந்த இருள்தருமா உலகில் வாழ ஊழ் இல்லை என்று எண்ணிக் கொண்டேன்.