பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நினைவுக் குமிழிகள்-2

எலும்பு முறிவு இல்லை, மூட்டுப் பிசகுதான்’ என்பது தெரிந் திருக்கும். தெரிந்து என்ன பயன்? விதியை நொந்து கொண்டு உடலை எருமைப் பட்டிக்குக் கொண்டு போவதில் முயற்சியை மேற்கொண்டேன்.

ஆம்புலன்ஸ் வண்டி கிடைக்க முயற்சி செய்தது பலிக்க வில்லை. உடலை எருமைப்பட்டிக்கு எடுத்துச்செல்ல sutri-ons w8%affigo (Pleasure Car) அமர்த்தினேன். அக்காலத்திலே வாடகை ரூ. 400/- கொடுக்க வேண்டிய தாயிற்று. சுமார் 60 கல்தொலைவு செல்ல இந்த வாடகை. காலையில் 6 மணிக்குக் கிளம்பிய வண்டி மாலை 3 மணிக்குத் தான் எருமைப்பட்டியை வந்து அடைந்தது. வழியில் மூன்று இடத்தில் சக்கரத்திலுள்ள குழாய் வெடித்துப், பழுது பார்த்துக்கொண்டு சென்றதால் தாமதம். வண்டிக்காரன் ஒரு சேவலைப் பலி கொடுத்திருந்தால் இத்தடை நேர்ந் திருக்காது என்று கூறினான். மூடநம்பிக்கையின் ஆழத்தை இதனால் உணர முடிந்தது. பள்ளிக் கட்டடத்தை உபயோகப்படுத்துமுன் இப்படி ஒரு பலியிடாததால்தான் இறைவன் சிறுவனை நரபலி வாங்கிக் கொண்டானோ என்று நினைத்துக் கொண்டேன்! மனிதனுடைய மூளை சந்தர்ப்பத்திற்கேற்ப நியாயம் கற்பித்துக் கொள்வதை நினைந்து நினைந்து சிரிக்கத் தோன்றுகின்றது.

மாலை 5 மணிக்கு உடலைப் புதைக்காமல் தகனம், செய்தோம். பெரிய மனிதனுடைய அறிவு இச்சிறுவனிடம் காணப்பெற்றதால் உறவினர் இம்முறையினை மேற் கொண்டனர் போலும். மறுநாள் பால் தெளிக்கும் சடங்கு முடிந்தபிறகு பொட்டணத்திலிருந்து பையனின் தந்தை (என் மைத்துனர்) இராமசாமி ரெட்டியார் வந்தார்: துக்கக் குறிமுகத்தில் தெளிவாகத் தெரிந்தது. என் மைத்துனருக்குத் திருமணம் ஆகி சுமார் ஏழெட்டுகள் கழித்து, அவருக்கு