பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ப்புப் பிள்ளையின் சோகக் கதை 243

மகனாகப் பிறந்தவன் ஜனசராஜன். ம்ேமாதிரியே எனக்குத் திருமணமாகிப் பத்தாண்டுகள் கழித்து வளர்ப்புப் பிள்ளை யாக வந்து சேர்ந்தவன். இந்நிலையில் எனக்கு,

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல்

மருமத்தில் எறிவேல் பாய்ந்த புண்ணிலாம் பெரும்புழையில் கல்ைது ழைந்தால்

எனச்செவியிற் புகுத லோடும் உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த ஆகுயிர்நின்று ஊச லாட கண்ணிலான் பெற்றிழந்தான் எனவு ழந்தான்

கடுந்துயரம் கால வேலான் ."

(எண்இலா - அளவு இல்லாத: இயம்பிய - சொன்ன; மருமம் - மார்பு; புழை-துவாரம், கனல்-கொள்ளிக் கட்:ை-; உள்நிலாவிய - மனத்தில் உண்டான; கண்ணிலான் பிறவிக் குருடன்; கடுந்துயரம் - மிக்க துன்பம்) என்ற கம்பராமாயணப் பாடல் நினைவுக்கு வந்தது. இராமனை வேள்வி செய்வதற்குத் துணையாகத் தன்னுடன் அனுப்புமாறு விசுவாமித்திரன் கேட்டபோது தயரதன் அடைந்த நிலையைக் கூறுவது இப்பாடல். சிறுவன் இறந்து மூன்றாண்டுகட்குப் பிறகு எனக்குப் புத்திரப்பேறு ஏற்பட்டது (1949). என் மைத்துனருக்கும் வரிசையாக நான்கு பெண் பிள்ளைகள் பிறந்தனர். எனக்கு இரண்டாவது மகன் காரைக்குடியில் வாய்த்தபோது (1953) என் மைத்துனருக்கும் ஆண்வாரிசு ஏற்பட்டது.

2. பாலகா. கையடை-11.