பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 ... * நினைவுக் குமிழிகள்-2

குமிழி-95 31. வைரிசெட்டிப் பாளையம்குடிமைப் பயிற்சி முகாம்

1948 சனவரி என்று நினைக்கின்றேன். இந்த முகாம் வைரிசெட்டிப் பாளையத்தில் நடைபெற்றது. சுதந்திரம் வந்தபிறகு திரு. தி. சு. அவினாசி விங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தபொழுது இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பெற்றது. இதன் விவரங் கள் எல்லா உயர்நிலைப் பள்ளிகட்கும் அனுப்பப்பெற்றன. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் இத்திட்டம் பற்றிய பயிற்சிகள் பயிற்சிபெறும் ஆசிரியர்கட்குத் தரப்பெற்றன. பன்னியில் மாணாக்கர்கட்கு இப்பயிற்சி தருவதைவிட பள்ளிக்கு வெளியே இது தரப்பெற்றால் சிறக்கும் என்று கருதினேன். இதற்குப் பணச்செலவு ஆகும் அல்லவா? இது என் மனத்தை உறுத்தியது. பள்ளிச் சிறுவர்களிடம் கட்டணம் வாங்கி இதை நடத்துவது என்பது சாத்தியப் படுவதாகத் தோன்றவில்லை. - -

அக்காலத்தில் வைரிசெட்டிப் பாளையத்தில் வள்ள லாகத் திகழ்ந்தவர் திரு. S. R. காகரெட்டியார் என்பவர். 96 மாணவர்கட்கும் 6 ஆசிரியர்கட்கும் 3 நாட்கள் உணவு வசதி, தங்கும் வசதிகள் இலவசமாகச்செய்து தரப்பெறுமா?’ என்று கேட்டு எழுதினேன். திரு. ரெட்டியார் அறமே வடிவெடுத் தாற் போன்றவர். அவர் மனம் விரியும் அளவிற்கு அவரிடம் செல்வம் இல்லாது போயினும் இருந்தவரைப் பிறருக்கு மனமுவந்து வழங்குபவர்; அவருக்கு நிகர் அவரே. அவர் அன்புடன் என் திட்டத்திற்கு மனமுவந்து ஒப்புதல் தெரி வித்தார்; நானே நேரில் சென்று திட்ட விவரங்களை எடுத்து வைத்து இசைவு பெற்றேன்.