பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமைப் பயிற்சி முகாம் 245

படிவத்திற்குப் 18 பேர் வீதம் 5 படிவங்களில் 96 மாணவர்களைத் தேர்ந்தெடுத்தேன். திரு. மாதுர்பூதம், திரு. உமாபதி ரெட்டியார், திரு. இராமய்யா, திரு. வி. சி. கிருஷ்ணசாமி ரெட்டியார் (தமிழாசிரியர்), திரு. கே. பிச்சுமணி அய்யர், திரு. ட். மாணிக்கம் ஆகிய அறுவரை உதவிக்குக் கூட்டிக் கொண்டேன். பள்ளி உதவியாள் முத்து சாமியையும் கூட வருமாறு பணித்தேன். ஒருநாள் இரவு உணவுக்குப் பிறகு 7 மணிக்குமேல் பேருந்துக்கு 10, 12 பேர் வீதம் அனைவரையும் கொப்பம்பட்டிக்குக் (சாலை மேலுள்ள ஊர்) கொண்டு சேர்த்தோம். அங்கிருந்து 4 ஃபர்லாங் தொலைவு நடை. வளர்பிறையில் முகாம் தேர்ந் தெடுக்கப் பெற்றதால் முன் நிலா வெளிச்சம் இருந்தது. வசதியாக வைரிசெட்டிப் பாளையம் போய்ச் சேர்ந்தோம். மாணவர்களைக் கலந்து (மேல்வகுப்பு, கீழ்வ குப்பு மாணவர் கள் என்று வேறுபாடு இல்லாமல்) 6 அணிகளாகப் பிரித்தோம். அவற்றிற்கு A, B, C, D, E, F, எனப் பெய ரிட்டோம். ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் 6 அணி கட்கும் ஒரு தலைவர் (House Leader-HL), மொத்த அணி sl. Slb SAG56... svart (School Pupif Leader-SPL) Ersärgy ung நாள் காலை 7 மணிக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். உடற் பயிற்சி ஆசிரியர் காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் உடற்பயிற்சி தருதல், ஒவ்வொரு அணியும் தங்கும் இடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்ற பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டார். இவ்வளவு பேர் களும் மூன்று நாள் குளிக்க வேண்டும். அதற்கு நாக ரெட்டியார் வீட்டருகிலுள்ள வயலில் மோட்டர் போட்டு தொட்டியில் நீர் நிரப்பிக் குளிக்க ஏற்பாடு செய்யப்பெற்றது. எந்தக் காரணத்தாலும் மாணவர்களைக் கிணற்றிலிறங்க வாய்ப்பு தருவதில்லை. ஒவ்வொரு அணியும் குளிப்பது, உணவு கொள்ளுவது போன்ற விவரங்களை ஆசிரியர்கள்