பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமைப் பயிற்சி முகாம் 247

தலைவருக்குக் கீழ்ப்படிதல்' என்ற பண்பு வலியுறுத்தப் பெற்றது. மூன்று நாள் பயிற்சி இந்த முறையில் நடை பெற்றது. இந்த மாணவர்களைக் கொண்டு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி தரத் திட்டமிட்டேன். என் வாழ்நாளில் பெரும் பகுதியை மாணவர் நலனுக்கே அர்ப்பணித்து வரத் திட்டமிட்டுள்ளேன்.

அன்பர்பணி செய்ய எனை

ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்

தெய்தும் பராபரமே!’ என்ற தாயுமானவர் காட்டிய ஒளி என் மனத்தில் சுடர்விட்டு ஒளி காட்டுகின்றது,

மூன்றாம் நாள், காலை சிற்றுண்டி முடிந்ததும் * புளியஞ்சோலை'யில் முகாம் அமைத்தோம். மாணவர்களை நடையில் மாணவர் தலைவரின்கீழ் அடங்கிச் செல்லுமாறு அனுப்பி வைத்தேன். மாதர்பூதம், மாணிக்கம், உமாபதி ரெட்டியார் - காமும் நடையில் செல்வதாக மாணவர் களைத் தொடர்ந்தனர். ஒரு வண்டியில் நீர்மோர், பகல் உணவுக்கு வேண்டிய வர்க்க.அன்னங்கள், இலைக்கட்டுடனும் இதர சிறு பாத்திரங்களுடனும் அனுப்பி வைத்தார் திரு. நாகரெட்டியார். பிற்பகல் 3 மணிக்கு காஃபிக்குரிய பால், சருக்கரை, காஃபிப் பொடி முதலியவையும் இந்த வண்டி யில் சென்றன. எங்கள் பள்ளியிலிருந்து வந்த முத்துசாமி என்ற உதவியாளனையும் இந்த வண்டியில் அனுப்பி வைத்தேன்.

நானும் எஞ்சிய ஆசிரியர்களும் தணிவண்டியில் சென்றோம். திரு. தாகரெட்டியார் அவர்களையும் வருமாறு வேண்டினோம். அவரும் மனமுவந்து எங்கள் வேண்டு கோளை ஏற்று எங்களுடன் பயணமானார். 10: மணி

1.தா.பா : பராபரக் கண்ணி- 155

4.