பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 நினைவுக் குமிழிகள்-2

சுமாருக்குப் புளியஞ்சோலையை அடைந்தோம். முதலில் எல்லோருக்கும் நீர் மோர் வழங்கப் பெற்றது. வெயிலில் நடந்து வந்த களைப்பு ஒருவாறு நீங்கியது. இந்த இடம் கொல்லி மலை அடிவாரத்தில் வைரிசெட்டிப்பாளையத் திலிருந்து சுமார் 3 கல் தொலைவில் உள்ளது. முகாமிற்கும், மகிழ்ச்சிச் செலவுக்கும் அற்புதமான இடம். இந்த இடத்தைப் பற்றிச் சில சொற்கள்: உயர்ந்தமரங்களால் சூழப்பெற்றது. மரங்களின் அடியில்பெரியனவும் சிறியனவுமான குண்டுக்கற் கள். மழைகாலத்தில்வெள்ளத்தால் உருண்டோடி வந்தவை. உருண்டு உருண்டு தேய்ந்து வழுவழுப்பான மேனியைக் கொண்டவை. இவற்றின் அடியில் ஊற்று நீர் கசிந்து ஒடிக் கொண்டிருக்கும். இவற்றின் அருகில் தனித்தனியாகப் பல அருவிகளில் ஊற்றுநீர் ஓடிக் கொண்டிருக்கும். இந்த நீரைத் தேக்கி அண்மையிலுள்ள நிலங்கட்குப் பாய்ச்சுவார்கள், குண்டுக் கற்களின்மேல் ஆயிரக்கணக்கானவர்கள் கூடலாம்; மாநாடு கூட நடத்தலாம். இலக்கியமாநாட்டிற்கு இயற்கைச் சூழல்அமைந்த இதைப்போன்ற ஒரிடத்தைக் காண்டில் அரிது. பகலவன் கதிர்கள் புக முடியாத வண்ணம் மரங்கள் அடர்ந்து நெருங்கி இருந்தன. மாணாக்கர்கன் எங்கள் கண் பார்வைக் கெட்டியவரையில் விருப்பப்படி சுற்றலாம் என்று அனுமதித்தோம். இப்பொழுதுதான் மாணாக்கர்களின் தனித் தன்மைகளைக் கண்டறிவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். 12 மணிக்கு எல்லோரையும் கூட்டி வைத்து திரு. நாக ரெட்டியாரை அவர்களுடன் அரைமணிநேரம் உரையாற்றும் படி வேண்டினோம். அவரும் தமக்கே உரிய முறையில் உரையாற்றினார்; மாணாக்கர்கள் அடக்கத்துடனும் மரியாதையுடனும் அவர் உரையைக் கேட்டு மகிழ்ந்தனர். திரு. நாக ரெட்டியார் அவர்களும் மகிழ்ந்திருக்க வேண்டும். ஒன்றிரண்டு ஆண்டுகளில் தாம் வைரிசெட்டிப் பாளையத் தில் தொடங்கப் போகும் உயர்நிலைப் பள்ளிபற்றிக்