பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமைப் பயிற்சி முகாம் 249

கற்பனையில் கண்டிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. இறைவன் திருவருளால் 1960இல் உயர்நிலைப் பள்ளியும் தொடங்கப் பெற்றது வைரி செட்டிப் பாளையத்தில்,

பன்னிரண்டரை மணிக்கு அணி அணியாக மாணவர் களை அமரச் செய்து மாணவர் அணித் தலைவர்களின் உதவியால் உணவு பரிமாறப் பெற்றது. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உண்ட மனைப்புற விருந்து (Picnic) இது. குடிநீர் எங்கும் இருந்ததால் நீர் வினியோகிக்க அவசியம் ஏற்படவில்லை. உணவு பரிமாறுவதில் முத்துசாமியின் பங்கு குறிப்பிடத் தக்கது. எங்கள் பள்ளிக்கு முத்துசாமி சேவகனாக அமைந்தது பள்ளியின் தவப்பயன் என்றே சொல்லவேண்டும். இவனுடைய தந்தை பொன்னம்பலம் ஜமீந்தார் உயர்நிலைத் தொடக்கப் பள்ளியில் சேவகனாக பணிபுரிந்து வருபவன். இவனுடைய மகன் முத்துசாமி பாரதியாரின் கண்ணன் என் சேவகன்' போன்றவன்,

'கண்டு மிகவும் களிப்புடனே நானவனை

ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்றுமுதற் கொண்டு நாளாக நாளாக நம்மிடத்தே கண்ணனுக்குப் பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால் பெற்றுவரும் நன்மையெலாம், பேசி முடியாது.

கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என்(பள்ளி) வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல்

கண்டறியேன்

    • * *** 強曾爾 * * * -ા * T A માં ફ જ * * * * * * * * * * * * *豪奢娜 *中轴粤**é零

இங்கிவனை யான்பெறவே என்ன தவம் செய்து

விட்டேன்!” என்று சொல்வது முற்றிலும் பொருந்தும் (ஆறாவது வரியில் 'குடும்பம்’ என்பத குப் பள்ளி' என்று போடப் பெற்றது. 2. பா. பா : கண்ணன் பாட்டு : கண்ணன் - என்சேவக அடி (40-56)