பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. R. கிருட்டினசாமி ரெட்டியார் 25 s

என்றும் செல்லமாகவும் அன்பாகவும் வழங்கப்பெறும் திரு. ஆர். கிருட்டிண சாமி ரெட்டியார் ஓர் அபூர்வமான மனிதர்; எல்லோராலும் நல்லவர் என்று பாராட்டப் பெற்றவர். நான் துறையூரில் பணியாற்றியபோது இவர் நட்பு எனக்குக் கிடைத்தது இறைவனின் திருக்குறிப்பாகும். பண்பட்ட ஒர் எளிய உயரிய குடும்பத்தில் பிறந்து, பள்ளி கல்லூரிப் படிப்பு அதிகமில்லை என்றாலும், அவற்றை யெல்லாம் தம் அதுபவ ஞானத்தாலும், தம் ஒழுக்க சீலத் தாலும், பரந்த நோக்கத்தாலும், ஆகூழ், அவருக்கு நிறைய இருந்தமையாலும் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி "ஒரு கோடீஸ்வரன் என்னும் நிலைக்கு உயர்ந்தவர். இந்த உயர் நிலையிலும் பெருக்கத்து வேண்டும் பணிதல் (குறள்-953) என்ற வள்ளுவர் பெருமானின் அமுத மொழிக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்.

ஆறாவது வகுப்பு கூடத் தாண்டாத இவர் பண்பினாலும் அடக்கத்தினாலும் திறமையினாலும் இளைஞனாகத் திகழ்ந்த இவரைச் செந்தாரப்பட்டி முனிசீப்பு முத்து ரெட்டியார் என்பவர் (இவர் பெருநிலக்கிழாரும் கூட) தமது மகிழ்வுந்தின் ஒட்டியாக மாதம் ரூ 251= ஊதியத்தில் அமர்த்திக் கொண்டார். சில ஆண்டுகள் அப்பணியில் இருந்த போது இவர்தம் திறமை நன்கு புலனாயிற்று. தமது உ ற வி ன ரு ம் உப்பிலியபுரத்தைச் சார்ந்தவருமான திரு. சிதம்பர ரெட்டியாருக்குச் சொந்தமான இராஜ கோபால் டிரான்ஸ்போர்ட்ஸ் என்ற பேருந்துக் கம்பெனியில் மாத ஊதியம் ரூ. 50|-இல் மேலாளராக நியமனம் பெற ஏற்பாடு செய்தார் திருமுத்து ரெட்டியார். இதில் ஒரு பத்தாண்டுகள் (1936-46) இவர் பணிபுரிந்திருக்கக்கூடும், இக்காலத்தில் கம்பெனியை மிகத் திறம்பட நடத்தி வருவாயைப் பெருக்கித் தம் முதலாளியின் அன்பிற்குப் பாத்திரரானார். இக்காலத்தில் பேருந்துக் கம்பெனியின்