பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. R. கிருட்டினசாமி ரெட்டியார் 253

பட்டார். இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டி முதலாளியிடம் வத்தி வைத்தார். இதனைக் கேள்வியுற்ற திரு. ரெட்டியார் முதலாளியை அணுகி எதையும் நன்கு

விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

முதலாளி சிதம்பர ரெட்டியார் (இவரைச் செவிட்டுத் தம்பு’ என்று செல்லமாக வழங்குவர்; இதற்கு ஒருப்பட வில்லை. இப்படிச் செய்தால் கணக்கப்பிள்ளை-கம்பெனியின் அந்தரங்கங்களையெல்லாம் கைக்குள் அடக்கி வைத்திருப் பவர் - ஏதாவது மொட்டை மனு வருமானவரித் துறைக்கு அனுப்பித் தம்மை மாட்ட வைத்தல் கூடும்என்று அஞ்சினார் திரு. கிருட்டிணசாமி ரெட்டியார் சொல்லிலும் செயலிலும் நேர்மையானவர்; தூய்மையானவர். மானங் காக்கும் மாமனிதர். முதலாளி தம் கோரிக்கைக்கு மெத்தனமாக இருப்பதைக் கண்டு தம்மைப் பதவியிலிருந்து விடுவித்துக் கொள்ளக் கருதினார்; முதலாளியிடம் தம் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்கு முதலாளி, "திடீரென்று நாலும் தெரிந்த நீ விலகிக் கொண்டால் கம்பெனி எப்படி நடக்கும்? ஆகவே விடுதலை தர முடியாது' என்று மறுத்து விட்டார். 'அப்படியானால் ஓராண்டு காலம் தருகின்றேன். தக்க ஒருவரை நியமித்துக் கொண்டு என்னை விடுவித்துவிடுங்கள்’’ என்று எழுத்து மூலமாகவே வேண்டுகோள் விடுத்து வாளா இருந்து விட்டார்.

ஓராண்டு உருண்டோடியது. தம்முடைய எதிர்காலத் திட்டத்தைப் பற்றிச் சஞ்சலத்துடன் சிந்தித்துக்கொண்டிருக் கையில் திருவரங்கத்திலிருந்து முன்பின் தெரியாத சோதிடர் ஒருவர் வந்து சேர்ந்தார். 'தம்பு' என்று செல்லமாக வழங்கப்படும் கிருட்டிணசாமி ரெட்டியாரை அடிக்கடி இப்படிப் பலர் வந்து பார்ப்பர்; பலர் உதவி கோரி வருவர். அவர்கட்கு சொல்லாலும் செயலாலும் ஏதாவது உதவி செ ய்வது தம்புவின் இயல்பாக இருந்து வந்தது. ஏழைகளாக