பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 நினைவுக் குமிழிகள்-2

இருத்தல் ஒன்றிரண்டு ரூபாய் தந்து போக வேண்டிய இடத்திற்குக் சட்டணமின்றிப் பேருந்தில் ஏற்றியனுப்புவார். இச்சிறுகாரியங்களால் கம்பெனியின் பேரும் புகழும் அதிகரிக்கும் என்பது தம்புவின் பரந்த நோக்கம். இத்தகைய நற்செயல்கள்தாம் கணக்குப் பிள்ளையை அழுக்காறு அடையச் செய்தன. 'அழுக்காறு உடையாருக்கு அது(வே) சாலும் (குறள் - 165) என்ற வள்ளுவர் வாக்கு எப்படிக் கயமைக்கு வழிகாட்டும்?

தம்புவைப் பார்க்க வந்த சோதிடர் ஒருமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். காஃபி முதலியவை வழங்கித் திருவாங்கத்திற்குக் கட்டணமின்றி பேருந்தில் ஏற்றி அனுப்பினார். போகும் முன்னர் ஒர் இரண்டு குயர் கோடிட்ட குறிப்பேடு ஒன்று தருவிக்கச் செய்து அதை வாங்கிக் கொண்டு சென்றார்; சாதகக் குறிப்பையும் பெற்றுச் சென்றார். ஒரு சில மாதங்களில் சாதகத்தை ஆய்ந்து விரிவான விளக்கங்களுடன் எழுதி வருவதாகக் கூறிச் சென்றார். தம்பு இதை மறந்தே போய் விட்டார். ஆனால்

பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்ப தெல்லாம் வயிற்றுப் பெருமான் பொருட்டு ' என்று பெரியோர் கூறியவாறு சோதிடர் வயிற்றுப் பிழைப் பின்பொருட்டு ஏதோ கூறிச் சென்றார் என்ற கருத்து மட்டிலும் அவர் மனத்தில் ஊன்றிக் கிடந்தது.

X X X X பொருள்களில் பற்றாக்குறை ஏற்படுங்கால் அரசு பல்வேறு கட்டுப்பாட்டுக் (Control) கொள்கைகளை ஏற்படுத்தும். இரண்டாம் உலகப்பெரும்போர் நடைபெற்ற போதும் அது முடிவுற்றுச் சிலகாலம் வரையிலும் உணவுப் பொருள்கட்கும் (அரிசி, சருக்கரை முதலியவை) துணி

! அறநெறிச் சாரம் - 130