பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறையூர் வாழ்வில்

குமிழி - 65

1. நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்

"ஞானியர்-மரபில் பிறந்து வளர்ந்து மேற்கல்வி பயின்ற எனக்கு இறைவன் திருவுள்ளப்படி ஆசிரியர் பணி என் வாழ்க்கைத் தொழிலாக அமைந்தது. 1941-சூன் 4 ஆம் நாள் தொடக்கம் பெற்ற பெருநிலக் கிழவர் நடுநிலைப் பள்ளியில் முதல் தலைமையாசிரியராகப் பணியேற்றேன். பள்ளி 4-ஆம் தேதி தொடங்கப்பெற்றாலும் சூன் முதல் தேதியிலிருந்தே நியமனம் பெற்று பொறுப்பு தொடர்ந்தது. மாத ஊதியம் ரூ 40/- என அறுதியிடப் பெற்றது.

பெருநிலக் கிழவர் உயர்நிலைத் தொடக்கப்பள்ளி யிலிருந்து (இந்தப் பள்ளி துறையூருக்குள் இருந்தது; நடு நிலைப்பள்ளி ஊரையொட்டி சுமார் ஒருகல் தொலைவில்மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரில்-அமைந்திருந்தது) டி.எஸ். இராமய்யா, டி.ஏ. மகாலிங்கம் என்ற இரண்டு இடை நிலை ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட பள்ளியிலிருந்து விலகி ரூ 331-மாத ஊதியத்தில் நடுநிலைப்பள்ளியில் வந்து சேர்ந்தனர். இந்தப்பள்ளியில் நான் படித்த காலத்தில்