பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. R. கிருட்டினசாமி ரெட்டியார் 255

முதலியவற்றிற்கும் கட்டுப்பாடுகனை விதித்தது அரசு. அப் போது தம் நாட்டை ஆண்டது பிரிட்டிஷ் அரசு. துறையூரில் வணிகர் ஒருவர் மாதம் நாற்பதினாயிரம் கெஜம் துணியை இலங்கைக்கு அனுப்பும் உரிமம் (Licence) பெற்றார். ஆனால் அவர் உண்மையில் துணி வாங்கி அனுப்பும் செயலில் ஈடுபட வில்லை. இதனை யாரோ ஒரு பெரு அணிகருக்கு விற்று விட்டுத் தாம் மட்டிலும் மாதந்தோறும் ரூபாய் நாற்பதி னாயிரம் பெற்றுக் கொண்டே வந்தார். பற்றாக்குறை நிலவிய சில ஆண்டுகளில் நாற்பது ஐம்பது இலட்சம் ரூபாய் அவரிடம் குவிந்தது. இப்படிப் போர்க் காலப் புதிய பணக்காரர்கள் எத்தனையோ பேர் தோன்றியதை நாம் அறிவோம்.

துறையூர் துணிக்கடை வணிகருக்கு இப்படிப் பொருள் குவித்ததைக் கண்டனர் அவர் கடைப் பணியாட்கள். குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் தம் முதல வரியை அணுகித் தமக்கும் ஒரு சிறு பகுதித் தொகை யைப் பிரித்து வழங்க உதவுமாறு வேண்டினர். முதலாளிக்கு மனம் வருமா? அவ்வாறு தருவதற்கு அவர் ஒருப்படவில்லை. மனிதனை ஆசைபடுத்துகின்ற பட்டைச் சொல்லிமுடியாது. ஆசையால் முதலாளிக்குக் கணக்கில் வராத பணத்தின் ஒரு பகுதியைப் பிரித்துத் தர மனம் வரவில்லை. எப்படி யாவது ஒரு சிறுபகுதியாவது தமக்குக் கிடைத்தால் தம் வறுமைத் துன்பம் ஒரளவு ஒழியும் என்று கருதினர் பணியாளர்கள். இதுவும் ஆசையின் விளைவு தானே. தம் முதலாளியின் மனநிலையை நன்கு அறிந்த அப்பணியாளர் களில் ஒருவர்-கட்டுப்பாட்டு வாணிகத்தின் தில்லு முல்லு களை நன்கு அறிந்தவர்-சுங்கத்துறைக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதியதுடன் மேலும் மேலும் தகவல்களைத் தந்து கொண்டேயிருந்தார். எலிப்பொறியில் எலி மாட்டிக் கொண்டது போல் வசமாக வழக்கில் மாட்டிக்கொண்டார் மு. த லா ளி. வ ழ க் கு .ெ ம ய் ப் பி க் க ப் படுத்தப்