பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. R. கிருட்டினசாமி ரெட்டியார் 26Ꭵ

இவற்றை ஒட்டுவதற்கு இணக்கச்சீட்டு (Permit) வாங்க வேண்டுமல்லவா? அதற்கு முயன்றார். அக்காலத்தில் இன்னோர்.அன்பர் நான்கு புதிய பேருந்துகளை வாங்கி 'நேஷனல் மோட்டார் சர்வீஸ்'என்ற பெயரில் ஒரு கம்பெனி அமைத்து இணக்கச் சீட்டுக்காக (Permit) முயன்று கொண் டிருந்தார்.

வெள்ளையர் ஆட்சியில் காரியம் நிறைவேற செல்வாக் கும் கையூட்டும் தேவைப்பட்டன. இவை அதிகாரிகளின் மட்டத்திலேயே நடைபெற்றுவந்தன. நாடு விடுதலைபெற்ல் பிறகு (1947க்குப் பிறகு) அதிகாரிகள் மட்டத்திலிருந்த செல் வாக்கு படிப்படியாக அரசியல்வாதிகளின் மட்டத்திற்கு மாறியது. முதலில் செல்வாக்கால் செயல்கள் நடைபெற்றன. நாளடைவில் கையூட்டும்தலையெடுக்கத்தொடங்கியது. இக் கையூட்டுமுறை முதலில் வாமனாவதாரம்போல் தொடங்கி நாளடைவில் திரிவிக்கிரமாவதாரமாக வளர்ந்துவிட்டது. போக்குவரத்துத் தொழிலில் பேருந்துகள் பெரும்பங்கு கொண்டுள்ளன. மோட்டார் சட்டங்களிலும் வரிவிதிப்பு களிலும் மாற்றங்கள் பேரளவில் நடைபெற்றுவிட்டன. பேருந்துத் தொழில் தேசீயமயமாக்கப்படுவதற்கு முன்னர் அரசு வருமானமும் குறிப்பிடத்தக்க அளவுக்கு மிகவும் உயர்ந்து காணப்பட்டது.

விடுதலைக்ருப் பிறகு இந்தியாவில் காங்கிரசின் செல்வாக்குதான் ஒங்கிநின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது ஒருசிலர் மிக்க செல்வாக்குடன் திகழ்ந்தனர்-கட்சிமட்டத்தில். இவர்களே அரசுமட்டத் திலும் செல்வாக்கைச் செலுத்தி செயல்களை நிறைவேற்று வித்தனர். தொடக்கக் காலத்தில் இலாபமற்ற உதவியாகத் தோன்றியது படிப்படியாகப் பணஉதவியாக மாறியது. அரசியல் உலகில் பண மூட்டைகள் பெருகலாயின, முதலில்