பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 நினைவுக் குமிழிகள்-2

இச்செயல் பொதுமக்களுக்கு விளங்காப் புதிராகவே இருந்து வந்தது. இன்றைய நிலையில் இதை அறியாதவர்களே இலர். குடிசைவாழ் மக்களும் . ஏன்? பிச்சைக்காரர்கள் உட்பட - இந்தக் கையூட்டு நாடகத்தை நன்கு அறிந்துள்ளனர். தொடக்கத்தில் ஆட்சி தியாக புருடர்களின் கையிலிருந்தது. இவர்கள் கையிலிருந்தவரை நாட்டிற்குக் கேடொன்றும். விளையவில்லை. நாளடைவில் ஆட்சி படிப்படியாகப் பண மூட்டைகள், தில்லுமுல்லுக்காரர்கள், கபடநாடகம் நடிப் போர் இவர்கள் கைக்கு மாறியது. இவர்கள் கையில் உள்ள ஆட்சியில் சுரண்டல்களைத் தவிர வேறொன்றையும் காண முடியவில்லை. நாட்டிற்குச் சலியாத நல்ல வருவாயைத் தந்தவர்கள் யாவரும்,

எலியாக முயலாக இருக்கின்றார்கள்

ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டேன்

புலிவேஷம் போடு கின்றான்! பொதுமக்கட்குப்

புல்லளவு மதிப்பேனும் தருகின்றானா?”

என்று பாவேந்தர் நாட்டில் நிலவிவரும் நிலையைக் காட்டு கின்றார். அரசியல்வாதிகள் பொருளாதாரச் சீர்கேட்டை உண்டாக்கியதைப் பாவேந்தர்,

பொத்தல்இலைக் காலமானார் ஏழை மக்கள் .

புனல்நிறைந்த தொட்டியைப்போல் ஆனார் செல்வா

அதிகரித்த தொகைதொகையாய்ச் செல்வமெல்லாம்

அடுக்கடுக்காய்ச் சிலரிடம்போய் ஏறிக்கொண்டு சதிராடு தேவடி யாள்போல் ஆடிற்று!

தரித்திரரோ புழுப்போலே துடிக்கின்றார்கள்:

2. புரட்சிக்கவி. 3. உலகப்பன் பாட்டு-2,3.