பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நினைவுக் குமிழிகள்-2

(1930-31) தலைமையாசிரியரரக இருந்த டி.எஸ். இராச கோபாலய்யர் என்பவரே தலைமையாசிரியராக இருந்து வந்தார். இந்தப்பள்ளி வெளியுலகு அறியாமல் அரண்மனைக் குள் அடங்கிக் கிடந்த முதியவர் பெருநிலக்கிழவர் பொறுப் பில் நடைபெற்று வந்தது. இராசகோபாலய்யர் மட்டிலும் அவரைக் காணமுடியும். முதியவருக்கு இவர் அவர் வேண்டும் போது இசை விருந்து அளித்து மகிழ்விப்பார். பள்ளியின் முழுப் பொறுப்பையம் இவரிடமே விட்டிருந்தார் முதியவ ராகிய பெருநிலக் கிழவர். இந்த முதியவரைப் பார்த்துப் பேசும் பேறு பெற்றவர்கள் இந்த இராசகோபாலய்யரைத் தவிர ஜமீன் வேங்கட்டராம அய்யர், ஷராப் செல்வ முத்து வாத்தியார் (வீரசைவர்), ஒர் இஸ்லாமியர் (இவர் பெயர் நான் அறிந்து கொள்ளவில்லை) ஆகிய மூவர். இவர்களுள் இஸ்லாமியர் தான் முதியவருக்கு அமைச்சர்போல் பணி யாற்றி வந்தார். இவர் அறியாமல் அரண்மனையில் ஒரு சிறு செயல்கூட நிகழ முடியாது. அரண்மனை நிர்வாகமே இவர் ஆணைக்குள் அடங்கிக் கிடந்தது; முதியவர் இவர் கைப் பாவையாக இயங்கி வந்தார். இப்படி இயங்கி வந்ததற்குக் காரணமான இரகசியம் என்னால் அறிந்து கொள்ள முடிய வில்லை; ஊகிக்கவும் இயலவில்லை. இந்த முதியவரைப்பற்றி இந்நூலின் முதற்பகுதியில் குறிப்பிட்டிருந்தாலும் இங்கும் குறிப்பிட விரும்புகின்றேன்.

முதியவருக்கு மூன்று ஆண் மக்கள்; எல்லோருக்கும் மூத்தமகன் (பிரசன்ன வேங்கடாசலதுரை?) நான் துறை யூரில் பணியேற்பதற்கு முன்னே திருநாடு அலங்கரித்து விட்டார்; இவர் துணைவியாரும் இவருக்கு முன்னதாகவோ பின்னதாகவோ மீளாஉலகம் அடைந்து விட்டார். இவர் கட்குப் பிறந்த ஓர் ஆண்பிள்ளை திருச்சியில் பாட்டியார் (முதிய வரின் துணைவி) அரவணைப்பில் வளர்ந்து வந்தான்.