பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. R. கிருட்டினசாமி ரெட்டியார் 271

நந்த அடிகளைச் சேவிக்கும் பணி இருந்தது. திருப்பாராய்த் துறை சென்று திரும்பும்போது தம்புவையும் பார்த்து அளவளாவியதாக நினைவு. வேங்கடத்தில் பணியாற்றி வருவது குறித்துப் பெரிதும் மகிழ்ந்தார். இக்காலத்தில் தம்பு திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்திலும் தம்மை அதிக மாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

1960 முதல் திருப்பதியில் தமிழ் எம்.ஏ. தொடங்கு வதற்குத் தமிழக அரசிடம் மானியம் கோரி அதற்காக முயன்று கொண்டிருந்தேன். திரு.சி. சுப்பிரமணியம் (கல்வி அமைச்சர்) ஆதரவு இருந்தது. அவர் மத்திய அமைச்சராகித் தில்லிக்குச் சென்ற பிறகு காங்கிரசு அமைச்சரவை உதவுவ தாக இல்லை. திரு. பக்தவத்சலம் காலத்தில் என் முயற்சி பலிக்கவில்லை. இக்காலத்தில் தம்புவின் உதவி கோருவ தைப் பற்றி நினைக்கவே இல்லை. காமராசரும் அரசுப் பொறுப்பைக் கழற்றிக் கொண்டு விட்டதால் தம்புவைப் பற்றிய சிந்தனையே என் மனத்தில் எழவே இல்லை. அது திராவிட ஆட்சிக்காலத்தில்தான் கலைஞர் முதல்வராக இருந்தகாலத்தில்தான். மானியம் கிடைத்தது. திருப்பதியில் தமிழில் உயர்கல்வி, ஆய்வு போன்றவைகட்கு வழி யமைந்தது. திருப்பதி சென்றதால் சுமார் இரண்டு இலட்சம் வரை எனக்கு இழப்பு, பதவி உயர்வு இல்லாமல் தவிப்பு . பேராசிரியர் பதவியைத் துறந்து விரிவுரையாளர் பொறுப்பை ஏற்றதால் வந்த வினை இது. பொருளை இழந்தாலும், பதவி உயர்வு இன்றித் தவித்தாலும் அங்கு (திருப்பதியில்) உயர் கல்விக்கு வழிவகை ஏற்பட்டதால் முழுமனநிறைவு ஏற் பட்டது. இன்றளவும் (1989) மகிழ்ச்சியுடன்தான் இருக் கின்றேன்.

திருப்பதியிலிருந்த போது ஒருமுறை (1976) என்மகன் இராமலிங்கத்தின் திருமண விஷயம்ாகத் தம்புவிடம் தொடர்பு கொண்டேன்: நேரிலும் சந்தித்தேன், எண்ணம்