பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 2$3

வாசவில் கண்டேன். என் கடித ஆசியால் மகன் பிறந்தான்" என்று மகிழ்ச்சி தெரிவித்து மகிழ்ந்தான். வருவது தானே வரும் என்று கூறி வாழ்த்தினேன்.

X Χ X

இரண்டு ஆண்டுகட்கு முன்ஷர் அரியலூர் அருகில் யாரோ வெடி குண்டு வைத்ததனால் இருப்பூர்தி விபத்து நேரிட்டது. இன்சினுக்கு அடுத்த த கவுள்ள குளிர்ச்சாதனப் பெட்டியில் சின்னபாப்புவும் அவன் துணைவியும் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். பெட்டி சுக்கு நூறாக உடைந்து சிதறிப் போயிற்று. அப்பெட்டியில் பயணம் செய்தவர்கள் அனைவருமே பரிதாபகரமாக மாண்டனர். பெற்றோருடன் சின்னபாப்புவின் திருமகன் (குழந்தை) பயணம் செய்யாமல் நேர்ந்தது இறைவன் திருவுள்ளம் போலும் என நினைத்துக் கொண்டேன். இந்தக் குழந்தை வளர்ந்து சான்றோனாகத் திகழ்ந்து தாத்தா R. கிருட்டிண சாமி ரெட்டியார் போல் பரோபகாரியாகவும் தெய்வ சிந்தனையுள்ளவனாகவும் பொலிவுறுவான் என்பது என் நம்பிக்கை,

வகுத் தான் வகுத்த வகையல்ல்ால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அசிது.”

A குமிழி-97 33. நினைவுச் சிதறல்கள்

莎雷命 துறையூரில் பணியாத்றிய காலத்தில் ஆசிரியர்கள் கிடைக்காமையால் பட்ட தொல்லைகளைக்

4. குறள் - 377 (ஊழ்)

நி-18