பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 நினைவுக் குமிழிகள்-2

மொட்டை மனுக்கள் எழுதுவதில் மிகவும் சமர்த்தர்கள், மேலிடங்களிலிருந்து இவை Fo Remarks என்று போட்டு வரும். இப்படி மறுமொழி தருவதற்கே, நேரம் போதாது. சிலவற்றிற்கு நானே பதில் தந்து விடுவேன். சிலவற்றிற்குப் பிச்சுமணி அய்யரின் துணையை நாடுவேன். அவர் ஒருவருக்குத் தான் தட்டச்சுப் பொறியை இயக்கத் தெரியும். போர்த் துறையிலிருந்து வந்தவருக்கும் தெரியும்; ஆனால் அவரை எப்படிப் பயன் படுத்துவது? மொட்டை மனுக் களுக்குப் பதில் எழுதும் பொறுப்பு பெரும்பாலும் பிச்சுமணி அய்யருக்கே விட்டு வைத்தேன். அலுவலகக் கடிதங்கட்கு பதில் எழுதுவதில் மன்னர் . இத்தகைய திறமை வாய்ந்த வரைக் காண்டல் அரிது. எல்லாத் திறமைகளும் இவரிடம் பொருந்தி இருந்தன. இவர் இடைநிலைத் தேர்வில் (intermediate) முதல் வகுப்பில் தேறி வறுமையால் மேல் படிப்பு தொடர முடியாமல் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியத் தொழிலுக்கு வந்தவர்; மற்றொருவர். திரு. மாத்ருபூதம் என்பவர். என் வகுப்புத் தோழர்; இடைநிலைத் தேர்வில் ஒரு பாடத்தில் தேறாது ஆசிரியர் பயிற்சி பெற்று இத் தொழிலுக்கு வந்தவர். இவர்கள் இருவரையும் தூண்டி பி.ஏ. பட்டம் பெறச் செய்தேன்; ஐந்து மாதப் பயிற்சியில் பி.டி. பட்டமும் பெற வாய்ப்புகள் அளித்தேன். பிச்சுமணி அய்யர் நான் பள்ளியை விட்ட பிறகு கீரம்பூர் என்ற பக்கத்துாரில் புதிதாகத் தொடங்கப் பெற்ற பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி நற்பெயருடன் ஒய்வு பெற்றார். இவர் இப்போது இல்லை: திருநாடு அலங்கரித்து விட்டார். திரு. மாத்ருபூதம் பி.டி. பட்டம் பெற்று துறையூரி லேயே பணியாற்றி ஓய்வு பெற்றவர். நல்வாசிரியராதலால் ஓய்வு பெற்ற பிறகும் பல்லாண்டுகளாகத் தனி வகுப்புகள் நடத்தி, அதனால் கணிசமான அளவு வருவாய் பெற்று, வாழ்ந்து வருபவர். இன்றும் நன்னிலையில் உள்ள்ார்.