பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 நினைவுக் குமிழிகள்-2

ரூ. 50/- வீதம் வாங்கியதில் ரூ 300/- க்கு மேல் சேர்ந்தது. இதையும் வானொலி நிதியாகத் தண்டப்பெற்ற தொகையை யும் கொண்டு பெரிய வானொலிப் பெட்டி (RCA-மாடல்) ஒன்றும், பிக்அப் ஒன்றும் வாங்கப் பெற்றன. வானொலிப் பெட்டி திறக்கும் விழா ஒன்று அமைக்கப் பெற்றது. உள்ளூர் மாவட்ட நீதிமன்றத் தலைவரை விழாத் தலைவராகவும், ஆத்தூர் உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் அ. சாம்பசிவ ரெட்டியாரைத் திறப்பாளராக வும் கொண்டு விழா நடத்தப் பெற்றது.

X X X

நான் துறையில் இருந்தவரை இந்தி மொழி கற்பிக்கும் வசதி பள்ளியில் இல்லை. இந்தி ஆசிரியரை நியமிக்கும் எண்ணம் நிர்வாகத்தினருக்கும் இல்லை. இந்நிலையில் திராவிடக் கழகம், சுயமரியாதைக் கட்சி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடிக்சடி அறிவிக்கும். மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள்: பள்ளிக்கு முன்னால் மறியல் நடைபெறும். மாணாக்கர்கள் இரண்டு வரிசையாக நின்று கொண்டு இந்தி ஒழிக’ தமிழ் வாழ்க’. இந்தியை வல்லந்த மாகத் திணிக்காதே’ என்ற போர்க் குரல்களை (Slogans) எழுப்புவார்கள். நான் இதைத் தடைசெய்ய ஏற்பாடு செய்வதில்லை. பள்ளியிலே இந்தி கற்பிக்கும் திட்டம் இல்லாதபோது இதை ஏன் தடுக்க வேண்டும்? தடுத்து நிறுத்தினால் கிளர்ச்சி வளரும் என்ற எண்ணத்தினால் வாளா இருந்து விடுவேன். உடனே பல மொட்டை மனுக்கள் மாவட்டக் கல்வி அதிகாரி, கல்வி இயக்குநர் இவர்க்கு அனுப்பப்பெறும். தலைமையாசிரியரே மாணவர் களைத் தூண்டிவிட்டு இந்தி எதிர்ப்பை நடத்தச் சொல்கிறார் என்பது மொட்டை மனுக்களின் குற்றச்சாட்டு. இவற்றிற்குச் சமாதானம் கோரி அவை எங்கட்கு அனுப்பப் பெறும். சுதந்திரம் பெற்ற பிறகு மொட்டை மனுக்களின்