பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 279

எண்ணிக்கையும் அதிகரித்தது. இவற்றிற்குப் பதில் எழுதும் வீண் வேலையும் பெருகியது, ஒன்றிலும் பற்றாது இருக்கும் தலைமையாசிரியரை திராவிடக் கழகச் சார்பு உள்ளவர்” என்று உள்ளூர் சில்லறைக் காங்கிரசார் மொட்டை மனுக்கள் அனுப்புவது வழக்கமாகப் போய் விட்டது. ஒரு சமயம் நான் பேருந்தில் திருச்சிக்குப் போய்க் கொண்டிருந்தபொழுது அருகில் அமர்ந்திருந்த காவலர் (Police) ஒருவர் என்னை C1Dக்கள் கவனித்து வருவதாக எனக்குக் காதோடு காதாகச் சொன்னார். இவர் ஓரளவு என்னை நன்கு அறிந்தவர். அபாண்டப் பழி சுமத்துவதை இவரே விரும்பவில்லை. "இது பெரிய அநியாயம்' என்றே கூறிவிட்டார். இப்படிப் பல தொல்லைகள்.

X Χ X

திருமணமாகி 13 ஆண்டுகட்குப் பிறகு பிறந்த என் மகனுக்குப் பெயரிடும்விழா ஒன்றைச் சிறிய அளவில் அமைத் தேன். ஒர் ஐம்பது பேருக்கு அழைப்பு விடுத்தேன். இவர் களுள் 25 பேர்கள் பள்ளி ஆசிரியர்களே; ஏனையோர் உறவினர்கள், நண்பர்கள், ஐந்து வீசை சருக்கரை தேவைப் பட்டது. பங்கீட்டு முறையில் கிடைத்த சருக்கரை போதவில்லை. ஒரு வீசை சருக்கரை விலை எட்டனா (ஐம்பது புதுக் காசு என்பதாக நினைவு). கறுப்புச் சந்தையில் வீசை ஐந்து ரூபாய் வீதம் ஐந்து வீசை வாங்க நேரிட்டது.

சருக்கரை வினியோகம் செய்ய உரிமம் பெற்ற வணிகர் ஒருவர் இரண்டு மூட்டையை வினியோகித்து விட்டுச் 'சருக்கரை கையிருப்பு இல்லை’ என்று எழுதிய அட்டையை மாட்டிவிட்டார். அக்காலத்தில் உடையார் தெருவில் துணிவாகச் செயல் புரியும் பல இளைஞர்கள் இருந்தனர், அவர்கள் நான்கு கைவண்டிகளைக் கொண்டு வந்து சருக்கரை பதுக்கப் பெற்றிருக்கும் இடம் அறிந்து பூட்டை