பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 நினைவுக் குமிழிகள்.2

உடைத்து 18 மூட்டை சருக்கரையை ஏற்றி வைத்துக் காவல் நிலையத்தில் கொண்டு வந்து அடுக்கிவிட்டு "சருக்கரை வினியோகிக்கப்படும்' என்ற பெயர் அட்டை யையும் வணிகர் மாட்டி வைத்திருந்த "சருக்கரை கையிருப்பு இல்லை” என்ற பெயரட்டையையும் மாட்டி வைத்தனர். காவல் நிலைய ஆய்வாளர் திடுக்கிட்டுப் போய்விட்டார். வேறு வழியில்லாது வணிகரைக் கொண்டே வினியோகிக்க வகை செய்தார். இப்படிச் செய்யாமல் காவல் நிலையத்துக்குப் புகார் கொடுத்தால் எதுவும் நடைபெறாது, ரூபாய் நோட்டுகள் கைமாறும் என்பதை நன்கறிந்தே இவ்வாறு செய்தனர் என்று பொது மக்கள் பேசிக் கொண்டனர்.

1940க்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை யும் சிலர் தினைவு கூர்ந்து பேசிக் கொண்டதையும் கேள்விப் பட்டேன்.

கிகழ்ச்சி பஞ்சாயத்துத் தனி அதிகாரி ஒருவர் (ஆந்திரர்) இங்குப் பணியாற்றினார். அரை ரூபாய் முதல் கையூட்டுப் பெற்று வந்தார். பொதுமக்கள் ஒன்றும் செய்ய முடியாது தவித்தனர்: குமுறினர். மேலிடங்கட்கு இவரை மாற்றுமாறு புகார் மனுக்களை அனுப்பினர். அப்பொழுது நடைபெற்றது. வெள்ளையர் ஆட்சி, கண்டிப்பும் நேர்மையும் இப்போது சீர்குலைந்து இருப்பது போல் அன்று சீர் குலையவில்லை. ஆகவே, அவரை வேற்று ருக்கு மாற்றிவிட்டனர். கையூட்டு நிறைய வாங்கிக் கை கண்டவராதலால், ஊரை விட்டுப் போக மனமில்லாது மூன்று திங்கள் விடுப்பு வாங்கிக் கொண்டு துறையூரிலேயே தங்கியிருந்தார். நாடோறும் அஞ்சல் வாங்குவதற்குப் பகல் 12 மணிக்கு அஞ்சலகத்திற்கு வருவதுண்டு,