பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் . 281

அந்தக் காலத்தில் இப்போதிருப்பது போல் சாமான்கள் ஏற்றிச்செல்லும் வண்டிகள் (Lorries)இல்லவே இல்லை. தினந் தோறும் மாலை ஆறுமணிக்கு இரட்டை மாட்டுக்கூடு வண்டி களில்தான் சாமான்கள் திருச்சிக்கு ஏற்றிச் செல்லப்படும். அங்ங்னமே திருச்சியிலிருந்து சாமான்களை மாலை கிளம்பி மறுநாள் அதிகாலையில் அந்த வண்டிகள் துறையூருக்குத் திரும்பும். இந்த வண்டிகள் அஞ்சல் நிலையச் சாலையில் வரிசையாகத் தெருவோரத்தில் நிறுத்தப் பெற்றிருக்கும். ஒரு நாள் ஓய்விலிருக்கும் பஞ்சாயத்துத் தனி அதிகாரி அஞ்சல் வாங்க வந்தபோது அவருக்கு நடைபெற்ற மரியாதை இது : மூன்று நான்கு வாளிகளில் சாணம் கரைத்து வண்டிகளின் அடியில் வைக்கப் பெற்றிருந்தன. எலும்புகள், கருவாடு, எருக்கம்பூக்கள் இவை கலந்து தொடுக்கப் பெற்றுள்ள மாலை யொன்றை ஒருவர் வைத்துக் கொண்டு இன்னொரு வண்டியின் கீழ் இருந்தார்.

பஞ்சாயத்து அதிகாரி அஞ்சலைப் பெற்றுக் கொண்டு மிதிவண்டி ஏறும் சமயத்தில் வண்டியை நிறுத்தினார் ஒருவர். இதே சமயத்தில் எதிர்த்திசையிலிருந்து வந்து கொண்டிருந்தார் மற்றொருவர். முன்னவர் "என்ன அண்ணே, நம் ஐயா மாற்றம் ஆகிப் போகும்போது நாம் பிரிவுபசாரம் செய்யாமல் விட்டு விட்டோமே’ என்று சொல்ல, மற்றவர் 'சமயத்தில் நாம் இம்மாதிரி முக்கிய விஷயத்தை மறந்து விடுகின்றோம்’ என்று மறுமொழி கூற, வண்டியின்கீழ் இருந்த மூன்றாமவர் 'காலம் கடந்து போனாலும் நம் பிரிவுபசாரத்தை நிறுத்த முடியாது’ என்று சொல்ல, நான்காமவர் "ஐயா நல்ல வேளையாக விடுப்பில் இருப்பது நமக்கு வாய்ப்பு; ஒரு நாள் இதைச் செய்தேயாக வேண்டும்’ என்று மொழிய, ஐந்தாமவர், 'இப்போதே செய்துவிடலாமே” என்று கூற இப்படியாக நடிப் பொன்றைத் திட்டமிட்டிருந்தனர்.