பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 நினைவுக் குமிழிகள்-2

நான்காமலர், "அண்ணே, நாம் கரைத்து வைத் திருக்கும் சந்தனத்தைக் கொண்டு வருக” என்று சொல்ல, தயாரிலிருந்த மூவர் வாளிகளிலிருந்த சாணக் கரைசலை அதிகாரிமீது மடமட வென்று வேகமாகச் சாய்த்தனர். கூட்டத்தில் ஒருவர், 'தம்பி, சிறப்பாகத் தயாரித்து வைத் திருக்கும் மாலையைக் கொண்டுவா’ என்று கூற, மாலை யிடம் அவரும்வர, அதனை வாங்கி அதிகாரியின் கழுத்தில் சூட்ட எல்லோரும் கைகொட்டி மகிழ்ச்சி தெரிவித்து "ஐயா, போய் வாருங்கள். இப்படி எந்த அதிகாரிக்கும் பிரிவுப சாரம் நடத்தவில்லை' என்று கூறிக்கொண்டு அனை வரும் கலைந்தனர். வேடிக்கை பார்த்திருந்த பலர், ‘'வேண்டும், வேண்டும்; இன்னமும் வேண்டும்' என்று இந்தச் செயலை ஆமோதித்தனர். பாவம், மிக்க அவமானத்துடன் வீடு திரும்பினார் அந்த அதிகாரி. என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? அதிகாரி வாளா இருந்து விட்டார். பொதுமக்கள் நல்ல செயலுக்குத் திரண்டெழுந்தால் அரசுக்கு ஒன்றும் செய்ய முடியாத நின்லமை ஏற்பட்டுவிடும்.

நிகழ்ச்சி 2 : 1932-33இல் மற்றொரு நிகழ்ச்சியையும் மக்கள் நினைவு கூர்ந்தனர். இக்காலத்தில் நான் முசிறி கழக உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவத்தில் கற்றுவந்தேன். மாவட்ட நீதிபதி ஒருவர் (மலை நாட்டவர்) ஒரு புரோ நோட்டு வழக்கில் கையூட்டுப் பெற்று வழக்கில் பாதகமாகத் தீர்ப்பு கூறினார். இப்படிப் பல வழக்குகளில் அநியாயத் தீர்ப்பு கூறினார். இவர் கையூட்டு வாங்குபவர் என்பது ஊரறிந்த செய்தியாக இருந்தது. பொதுமக்களில் சிலர் கொதித்தெழுந்தனர். மாவட்ட நீதிபதி பழைய மாதிரி ஃபோர்டு வண்டி (Pleasure Car) வைத்திருந்தார். அது வீட்டருகில் ஒரு கொட்டகையில் நின்றது. வீட்டின்முன் பக்கப் பலகணிகளை மூடிவிட்டுப் படுப்பது வழக்கம். ஒரு நாள் சில நகர சுத்தித் தொழிலாளர்களைக் கொண்டு