பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 நினைவுக் குமிழிகள்-2

73. ஒர் ஆசிரியர் (பட்டதாரி, இளைஞர்) இப்பையனுடைய, விடைத்தாளை மதிப்பிடும்போது கணிதத்தில் இவன் தந்திருந்த விடைகளில் கழித்தல் குறி வந்த இடங்களில் எல்லாம் கூட்டல் குறிகளைப் போட்டு 13 மதிப்பெண்கள் வழங்கி இருந்தார். இவர் பிராமண விரோதி. அலுவல கத்தில் எல்லா நிலையிலும் தன்னை மறந்த நிலையில் உண்மையாக உழைக்கும் பிச்சுமணி அய்யர் இதைப் பார்த்துத் திடுக்கிட்டு இதை என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். முதலில் மதிப்பிட்டபோது வழங்கியது 73. இதில் சிவப்புப் பென்சிலால் போட்ட மதிப்பீட்டை அடித்துவிட்டு, கழித்தல் குறிகளை யெல்லாம் கூட்டல் குறிகளாக மாற்றி விடைகளைத் தவறு என்று அடித்துக் காட்டி 13 மதிப்பெண் வழங்கி இருந்ததையும் என் கவனத்திற்குக் கொண்டு வந்தார். மைவேற்றுமையால் மாற்றம் தெளிவாகத் தெரிந்தது.

இதை விசாரணைக்கு வைத்து அம்பலப் படுத்த வேண்டுக் என்று சொல்ல்lக் குதித்தார். பிச்சுமணி அய்யர் என்னைவிடப் பத்தாண்டுகள் மூத்தவர். தம் மகன் விஷய மல்லவா? எந்தப் பெற்றோரும் உணர்ச்சிவசப்படுவது இயல்புதானே? நான் முதல் மதிப்பீட்டைக் கணக்கிற்கு எடுத்துக் கொண்டு அவனை வகுப்பு மாற்றம் செய்தேன். ஆனால் மதிப்பெண் பதிவேட்டில் இந்நிகழ்ச்சியை விவர மாகக் குறிப்பிட்டுப் பதிவு செய்தேன். ஆசிரியர் பெயரை வெளியிடவில்லை. நிர்வாகத்தின் கவனத்திற்கு இந்த முறை கேட்டைக் கொண்டு வந்தேன்.

X X X

‘ஓர் ஒன்பதாண்டுகள் பள்ளியை நன்கு வளர்த்து விட்டோமே கல்லூரியில் வேலை கிடைத்தால் போகலாமே? என்ற எண்ணங்கள் என்மனத்தில் எழும். "நாம் வளர்த்த பிள்ளையை விட்டுவிட்டு எப்படிப் போவது?’ என்ற