பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 285

எண்ணமும் தோன்றி அதை அமுக்கி விடும் - கடலில் முன்னர் எழுந்து திரும்பும் அலையைப் பின்னர் எழும் அலை அமுக்கி விடுவது போல். தவிர, கல்லூரியில் வேலை வாங்கித்தரும் அளவுக்குப் பரிந்துரை செய்ய ஒருவரும் இல்லையே' என்ற ஏக்கமும் அடிக்கடித் தோன்றும்; மறுபடியும் கல்லூரிக்குப் போகவேண்டும் என்ற எண்ணத்தையே இது சிதைத்துவிடும். திக்கற்றவருக்குத் தெய்வம் துணையாக நிற்கும் அல்லவா? இஃது என் வாழ்க்கையில் உண்மையாகவே நிகழ்ந்துவிட்-திஇறையருளால் நான் கல்லூரிப் பணியில் போய்ச் சேர்ந்தும் விட்டேன். இதனை அடுத்த குமிழியில் வெளியிடுவேன்.

X X X

மாணவர்களை வகுப்பு மாற்றம் செய்யும்போது வரும் பரிந்துரைகள் சொல்லி முடியா. இவை பல்வேறு வடிவத்தில் வரும். என் நெருங்கிய உறவினர்களில் ஒரு சிலர் இரண்டு நாட்கள் வந்து என் வீட்டில் விருந்தினர்களாக இருந்து தொல்லைகள் தருவர். மாணாக்கர்களும் அவர்கள் பிள்ளை களுமல்லர்; யாருக்காகவோ வருவர். என்னிடம் வருபவர்கள் ஒரு சிலராக இருந்தபோதிலும் தொல்லை பளு அதிகமாக இருக்கும்; தாங்க முடியாது. ஒருவர் சொல்லுவார்: 'உன் தாத்தாவீட்டுச்சொத்தையாகேட்கின்றேன்?பதினைந்துமதிப் பெண்ணை 25 ஆகவோ 45 ஆகவோ மாற்றிப் போட்டால் குடியா முழுகிப் போகும்? இரண்டு சொட்டு மைதானே செலவு?’ என்பார். இத்தகையவரிடம் என்ன சொல்லுவது; மதிப்பீட்டை இவ்வளவு கேவலமாக நினைப்பவர்களிடம் என்ன பேசி என்னபயன்? ஒருசமயம் ஒருவர் வகுப்பு மாற்றம் பற்றிய ஆசிரியர்களின் இரகசியக் கூட்டத்திற்கே வந்து விட்டார். அவரைவெளியில் அனுப்புவதேபோதும் போதும்' என்றாகிவிட்டது. இப்படிஒவ்வொருஆசிரியருக்கும் எவ்வளவு தொல்லைகளோ? யார் அறிவார்? ஆவர்கள் எல்லாம்