பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 291

இல்லை’ என்றேன். நான் பாரம் தருகிறேன். தமிழ் ஆணர்சில் சேர்ந்து கொள்ளலாம். சில நாட்கள் கழித்து வரலாற்று ஆணர்சுக்கு மாற்றிக் கொள்ளலாம்.' என்று அறிவுரை கூறினார். அங்கனமே தமிழ் ஆணர்சில் சேர்ந்தேன்: பின்னர் வரலாற்று ஆணர்சு மாற்றிக் கொண்டான். மூன்றாண்டு கழித்து தேர்விலும் வெற்றி பெற்றான்.

X X X X

என்னைப் போலவே மாணவர் நலனே தம் பணியாகக் கொண்டவர் நாமக்கல் உயர் நிலைப் பள்ளித் தலைமை யாசிரியர் பி. ஆர். சுப்பிரமணிய பிள்ளை. அவர் ஆத்தூரில் தலைமையாசிரியராக இருந்தபோது பிச்சுமணி என்ற ஒர் அரிசன மாணவர்மீது அக்கறை கொண்டிருந்தார். அவர் நாமக்கல்லுக்கு மாற்றப்பட்ட பின்னகும் பையன் அவரைத் தொடர்ந்தான் ஆண்டுதோறும் (சுமார் 4 ஆண்டுகள்) என்னிடம் பிச்சுமணியை அனுப்பி வைப்பார், நான் பல பதிப்பகத்தார் தந்த மாதிரிப் பாடநூல்களை ஒர் அறையில் குவித்து வைத்திருப்பேன். அந்த அறைக்குப் பையனை அனுப் பித் தேவையான நூல்களை எடுத்துக் கொள்ளுமாறு ஏவு வேன். இதனால் அவனுக்கு ரூ 25| வழங்குவதற்குச் சமமான உதவி கிடைக்கும். சுமார் ரூ 10/- மதிப்புள்ள குறிப்பேடு களையும் வழங்குவேன். ஒரு வேளை உணவு கொள்ளச் செய்து அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய பேருந்துக் கட்டணத்தையும் தந்து அனுப்புவேன்.

பிச்சுமணி பள்ளியிறுதித் தேர்வில் அப்பள்ளியில் முதல் மாணவனாகத் தேறினான். சுதந்திர இந்தியாவில் பல சலுகைகள் கிடைத்தன. சேலம் கல்லூரியில் அப்போது முதல்வராக இருந்தவர் இராமசாமி கவுண்டர் இவரும் மாணவர்க்கு உதவும் ஆசிரியர் குழுவில் சேர்ந்த ஒரு பைத்தியக்காரர். இவரிடமும் எனககு நெருங்கிய பழக்கம்