பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39; * 。ー・ジ - ベ - ・ - ベ。ー ・* ・ > -*ーヘ*マン* நினைவுக் குமிழிகள்-2

உண்டு; இப்பழக்கத்தை ஏற்படுத்தியவர் உலக ஊழியர் என்ற தமிழ்ப் பேராசிரியர், சேலம் கல்லூரியில் சேர்ந்து படித்த பிச்சுமணி இடைநிலைத் தேர்வில் முதல் வகுப்பு பெற்றான பின்னர் பொறிஇயல் கல்லூரியில் சேர்ந்து B. E. பட்டமும் (முதல் வகுப்பு) பெற்று நடுவண் அரசின்கீழ்ப் பொறியியல் துறையில் உத்தியோகமும் பெற்றான். சில ஆண்டுகள் பணியாற்றிய பின் அமெரிக்கா சென்று விட்டான். அங்கு தல்ல நிலையில் இருக்கின்றான். இ ைத க் காதால் கேட்பதற்குக் கூட திரு பி. ஆர். சுப்பிரமணியபிள்ளை தம்மிடையே இல்லை. 1952லேயே அற்ப ஆயுளுடன் இறைவன் திரு அடி சேர்ந்தார். நான் மட்டிலும் அந்த மாணவனை நினைந்து போற்றுகின்றேன்.

நன்னிலைக்கண் தன்னை

நிறுப்பானும், தன்னை நிலைகலக்கிக் கீழிடு

வானும்-நிலையினும்

மேன்மேல் உயர்த்து -

நிறுப்பானும், தன்னைத் தலையாகச் செய்வானும்

தான்."

என்ற நாலடியாரின் பாடலில் தன்னைத் தலையாகச் செய்வானும் தான்’ என்பதற்கு பிச்சுமணி சிறந்ததோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றான்.

2. நாலடியார்-248 (அறிவுடைமை)